இந்த பயிற்சியை பெண்கள் தினமும் செய்துவந்தால் கொழுப்பு குறையும்; கட்டான உடல் கிடைக்கும்... 

Asianet News Tamil  
Published : Jun 11, 2018, 02:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
இந்த பயிற்சியை பெண்கள் தினமும் செய்துவந்தால் கொழுப்பு குறையும்; கட்டான உடல் கிடைக்கும்... 

சுருக்கம்

If women do this exercise every day the cholesterol will decrease Get the body ..

ஸ்கிப்பிங் பயிற்சியை பெண்கள் தினமும் செய்துவந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து,தொப்பை பிரச்சினை குறைந்து கட்டான உடலை பெறலாம்.

** முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.

** உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன.

** உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.

** கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது.

** நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. 

** மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும். அதனால் நீங்களும் உடலுக்கும் ஸ்கிப்பிங்தானே என எண்ணாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு ஸ்கிப்பிங் செய்து பயன்பெறுங்கள்.

PREV
click me!

Recommended Stories

செரிமானத்தை மேம்படுத்தும் 6 ஆயுர்வேத குறிப்புகள்
Asthma Prevention Tips : ஆஸ்துமா நோயாளிகள் இந்த '5' மாற்றங்களை செஞ்சா போதும்! மோசமான பாதிப்பை அப்படியே தடுக்கலாம்