ஒற்றைத் தலைவலியை அடியோடு விரட்டுவது ஆதொண்டை கீரைக்கு கை வந்த கலை...

First Published Jun 11, 2018, 2:41 PM IST
Highlights
The art of shaking a single headache to the cry of anchor ...


ஆதொண்டை கீரை

ஆதொண்டை கீரை, கொடி வகையை சேர்ந்தது. தடிப்பான இலைகளை கொண்டது. துளிர்விடும் பொழுது மஞ்சள் நிறமாகவும் முற்றிய இலைகள் பச்சை நிறத்திலும் இருக்கும். 

இக்கீரைக் கொடி வேலிகளில் படர்ந்து வளரும் தன்மையுடயது. இதன் காய்கள் இதன் இலை வடிவிலேயே இருக்கும். இக்கீரையை வீட்டிலும் வளர்க்கலாம்.

மருத்துவப் பயன்கள்:

இந்த கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி,சி ஆகியவை உள்ளன.

ஆதொண்டை கீரை வாத நோய் மற்றும் ஒற்றை தலைவலியுடன் கூடிய மூக்கடைப்பு ஆகிய நோய்களை விரைவில் குணப்படுத்தும். 

சீரணக் கோளாறுகளை சீர் செய்யும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு. 

தனியிலைகளைக் கொண்ட முள்ளுள்ள ஏறு கொடி. செந்நிறப் பூக்களையும் சதைக்கனியையும் கொண்டது. காய்கள் சமைத்து உண்ணக் கூடியவை. தமிழகமெங்கும் வேலிகளில் தானே வளர்கிறது. இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

நோய் நீக்கி உடல் தேற்றவும், பசி மிகுக்கவும் நாடி நடையை மிகுத்து உடல் வெப்பந் தரவும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இலையை நெய்யில் வதக்கித் துவையலாக்கி உணவுடன் கொள்ளச் சுவையின்மை, பசியின்மை நீங்கி பசியுண்டாகும்.

50 கிராம் வேர்ப்பட்டை நன்கு சிதைத்து 1 லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி. ஆகக் காய்ச்சி வடித்து 3 பங்காக்கிக் காலை, மதியம், மாலையாக சாப்பிட்டு வரப் பசியின்மை, வாந்தி, மார்பு வலி ஆகியவை தீரும்.
 

click me!