எண்ணெய் இல்லாமல் வாழைத் தண்டு கூட்டு செய்வது எப்படி?

Asianet News Tamil  
Published : Oct 20, 2017, 12:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
எண்ணெய் இல்லாமல் வாழைத் தண்டு கூட்டு செய்வது எப்படி?

சுருக்கம்

how to prepare vaazhai thandu koottu with out oil

உணவு பழக்க வழக்கங்கள் மாறியதால் ஏற்படும் பல விளைவுகளை தான் தற்போது நாம் அனுபவித்து வருகிறோம்.

காரணம்,கலப்பிட  உணவு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்திலுமே கலப்பிடம் தான் இன்று ...

இதனால் ஏற்படக்கூடிய சர்க்கரை  நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட  அனைத்து நோய்களும் மிக எளிதில் நம்மை தாக்கும்.விளைவு மாரடைப்பு  முதல் புற்றுநோய் வரை அனைத்தும்  வரும்.

இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள  பல வழிகள் இருந்தாலும், சில எளிய  வழிகளை பின்பற்றினாலே போதுமானது .....

அந்த வகையில் எண்ணெய் இல்லாத கூட்டு செய்வது  எப்படி  என  பார்க்கலாம்.....

வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை:

பாசிப்பருப்பு -அரை கப்,

வாழைத்தண்டு (மீடியம் சைஸ்) – ஒன்று,

வெங்காயம் (நறுக்கிக் கொள்ளவும்) – 1,

பச்சை மிளகாய் – 3,

காய்ச்சிய பால் – கால் கப்,

சீரகம் – அரை டீஸ்பூன்,

பூண்டு – 2 பல், கறிவேப்பிலை – சிறிதளவு,

 உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கவும். நறுக்கிய வாழைத்தண்டு,வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் திறந்து, அதனை வேக வைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு, நசுக்கிய பூண்டு,சீரகம், கறிவேப்பிலை, பால் சேர்த்துக் கிளறி பரிமாறினால் அவ்வளவு அருமையாக இருக்கும்

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake