இஞ்சி மற்றும் பூண்டினை இந்த கோடை வெயிலில் அதிக நாட்கள் வரை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க ஒரு சில ஈஸி டிப்ஸ் பற்றி தான் இந்த கட்டுரையில் காண உள்ளோம்.
இஞ்சி மற்றும் பூண்டு இரண்டும் நமது சமையலறையில் தவிர்க்க இயலாத மசாலாப் பொருட்கல் என்றே கூறலாம். அவை உணவுகளுக்கு மணமும், சுவையும் தருவதோடு அல்லாமல் வெப்பம் மிகுந்த கோடை மாதங்களில் இது பல்வேறு தேவையான ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன.
இஞ்சியின் பயன்கள்:
இஞ்சியில் பல இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இஞ்சியானது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுவதோடு வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும் காலங்களில் மிகவும் முக்கியமானதும் கூட.
இஞ்சி செரிமானத்திற்கு உதவுகிறது.தவிர வயிறு உபாதைகளையும் குறைக்க செய்கிறது. இது கோடை கால உணவுகளில் மிகவும் அவசியமாக சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பொருளாக இருக்கிறது.
பூண்டின் பயன்கள்:
பூண்டு, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, இது கோடையில் வெப்பம் மற்றும் நீரிழப்பு அதிகரிக்கும் போது, அதனை குறைக்க மிக பயனள்ளதாக இருக்கிறது. பூண்டானது இயற்கையிலேயே ஆண்டிபயாடிக் பண்பு கொண்டது. தவிர அதிக நோயெதிர்ப்பு சக்தியையும் தருகிறது.
கோடை நேரங்களில் அதிக வெப்பத்தினால் இஞ்சி மற்றும் பூண்டின் சுவை மற்றும் அவைகளின் அமைப்பிற்கு இடையூறு உண்டாக்கும் ஏனெனில் அவை கெட்டுப் போகும் அல்லது உலர்ந்து போகும் தண்மை கொண்டது. ஆக இப்படியான ஒரு சூழ்நிலையை தவிர்த்து, அதனை எப்போதும் ப்ரெஷ்ஷாக வைத்திருக்க ஒரு சில ஈஸி டிப்ஸ் பற்றி தான் இந்த கட்டுரையில் காண உள்ளோம்..
இஞ்சியை பாதுகாக்கும் முறை:
இஞ்சியை வாங்கி வந்த பிறகு அதனை தோல் உரிக்காமல் காற்று புகாத பையில் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுங்கள். காற்று புகாத பிளாஸ்டிக் பையில் இருப்பதால் ஈரப்பதம் மற்றும் ஆக்ஸிஜன் இஞ்சிக்கு சென்றடையாமல் ,கெட்டுப்போவதை தடுக்கிறது. இந்த மாதிரி காற்று புகாத பையில் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து வந்தால் இஞ்சியை 2 மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும்.
இஞ்சியை வெட்டி அதன் தோலுரித்து வைத்து இருந்தால் அதனை தூக்கி எறியாமல், இப்படி இஞ்சியை பிளாஸ்டிக் கவரில் வைத்து கட்டி, பிரிட்ஜில் வைத்தால் 1 வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
மேலும் இஞ்சியை நறுக்கி காற்று புகாத பாக்ஸில் வைத்து மூடி அதனை பிரிட்ஜில் வைத்தால் அதன் மூலம், இஞ்சியை சுமார் 2 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் வைக்க முடியும்.
பூண்டினை பாதுக்காக்கும் முறை:
பூண்டினை மாதக்கணக்கில் கெட்டுப் போகாமல் வைத்து உபயோகிக்க வேண்டுமானால் அதனை முளைத்து விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பூண்டு முளைக்காமல் இருந்தால், அதனை சூரிய ஒளியில் இருந்து வெளியில் அல்லது சற்று இருண்ட இடத்தில் வைத்து விடுங்கள். இதனால் பூண்டு கெட்டுப் போகும் வாய்ப்புக் குறைகிறது.
பூண்டுப் பற்களை உரித்து அல்லது நறுக்கி இருந்தால் அதனை உபயோகப்படுத்தாமல் இருப்பின், அவற்றைத் தூக்கி எரியாமல் ஏர் டைட் பாக்ஸில் வைத்து ஸ்டோர் செய்து அதனை பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இப்படி செய்தால் தோல் உரித்த பூண்டினை கூட 2 முதல் 3 வாரங்கள் வரை பயன்படுத்த முடியும்.
எவரும் பூண்டை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்வதில்லை அதே நேரத்தில் சரியான முறையில் பூண்டை ஃப்ரிட்ஜில் வைத்து வந்தால் பிரெஷ்ஷாக வைத்து பாதுகாக்க முடியும். இதற்கு, பூண்டினை பொடியாக வெட்டி அதனை ஏர் டைட் பாக்சில் வைத்து விட்டு, பிரிட்ஜில் வைத்து விட வேண்டும். இப்படிக்கு வைக்கும் போது உங்களுக்கு தேவைப்படும் போது நேரத்தில் மட்டும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
சோபகிருது வருடத்தின் 1 அம்மாவாசையான இன்று இந்த 3 எளிய பரிகாரகங்ள செய்து பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடுங்க!