சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்த இயற்கை மருந்து இருக்கு…

 
Published : May 18, 2017, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்த இயற்கை மருந்து இருக்கு…

சுருக்கம்

How to cure sugar in starting stage

 

இன்றைய உணவு பழக்கவழக்கத்தினாலும் நமது அன்றாட செயல்களினாலும் இந்தியாவில், சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும்.

மேலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக நமது உடலின் மேல் படையெடுக்க ஆரம்பித்து விடும்.

இப்படிப்பட்ட சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்தக் கூடிய இயற்கையான மருந்து ஒன்று உள்ளது.

அந்த மருந்தும், தயாரிப்பு முறையும் இதோ..

சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் நீரில் 2 துண்டுகள் வெண்டைக்காயைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற் முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.

சர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை சரிசெய்து, இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவுவதாக, பலர் அனுபவத்தில் கூறியுள்ளனர்.

வெண்டைக்காய்க்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் நீரிழிவுடன் கர்ப்பமாக இருக்கும் எலிக்கு வெண்டைக்காய் தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது.

ஒரு கட்டத்தில் அந்த எலியின் இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தது தெரிய வந்தது. துருக்கியில் வறுத்த வெண்டைக்காயின் விதைகள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், இம்முறையினால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து சீராக பராமரிக்கப்பட்டு வந்தது நிரூபிக்கப்பட்டது.

உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவதோடு, வெண்டைக்காய் நீரை குடிப்பதன் மூலம் குறைக்கலாம். நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவோராயின் உங்களது நோயெதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் தண்ணீர் வலிமையாக்கும்.

சர்க்கரை நோயுடன், சிறுநீரக நோய்களின் தாக்கத்தில் இருந்தும் விடுபட நினைத்தால், வெண்டைக்காய் தண்ணீர் அதற்கு நல்ல உத்திரவாதம் அளிக்கும். முக்கியமாக சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு, வெண்டைக்காய் நீர் மிகவும் நல்லது. இதனை பருகி வந்தால், ஆஸ்துமாவில் இருந்து நல்ல விடுதலை கிடைக்கும்

PREV
click me!

Recommended Stories

Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க
Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்