சிலருக்கு எவ்வளவு சிகரெட் பிடித்தாலும் புற்றுநோயே வராதாம் – ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி தகவல்…

 
Published : Oct 12, 2017, 01:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
சிலருக்கு எவ்வளவு சிகரெட் பிடித்தாலும் புற்றுநோயே வராதாம் – ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி தகவல்…

சுருக்கம்

How many cigarettes do you have with cancer?

சிலர் எப்போது பார்த்தாலும் புகைப்பிடித்துக் கொண்டே இருப்பார்கள். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று சிகரெட் டப்பாக்களை பிடித்தாலும் அவர்களுக்கு புற்றுநோயோ அல்லது நுரையீரல், சுவாசம் சார்ந்த எந்த பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது.

ஆனால், சிலருக்கோ புகைப்பவர்கள் பக்கம் கொஞ்சம் நேரம் நின்றால் கூட, இருமல், தலைவலி, ஏன் இதனால் புற்றுநோய் பாதிப்பு அடைந்தவர்கள் கூட பலர் இருக்கிறார்கள்.

அது எப்படி புகைப்பவருக்கு புற்றுநோய் வராமல் இருக்கும்?

இதை ஆராய்ச்சியாளர்கள் மரபணு குறிப்புகள் / குறிப்பான்கள் தொடர்புடையவை என குறிப்பிடுகிறார்கள்.

கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மோர்கன் என்பவர் நடத்திய ஆய்வில், சில வகை மரபணு கொண்டவர்கள் சாதாரணமாகவே நீண்ட ஆயுள் பெற்றிருக்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

எஸ்.என்.பி (Single Nucleotide Polymorphisms) இந்த ஆய்வில், ஒற்றை நியூக்ளியோடைட் பல்லுருத் தோற்றங்கள் (Single Nucleotide Polymorphisms) நெட்வொர்க், அதாவது டி.என்.ஏ வரிசையில் மாறுபட்டு இருக்கும் ஓர் வகை.

இது மக்களில் பொதுவாக சிலருக்கு இருப்பது உண்டு. இவர்களுக்கு சுற்றுசூழல் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறதாம்.

இந்த மரபணுக்கள் உயிர்மங்களை அதிகரித்தும், சேதமடையாமல் பாதுகாத்தும் வாழ்நாளை நீட்டிகிறது என மோர்கன் தனது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்.

இந்த மாறுபட்ட மரபணுக்கள் கொண்டவர் உயிரியல் அழுத்தங்களால் ஏற்படும் பாதிப்பு, புகைப்பிடித்தல் போன்றவற்றால் பெரிதாய் பாதிப்படைவதில்லை. ஏனெனில், மேல் கூறியவாறு இவர்களது உடல் செல்கள் உடனடியாக சேதத்தை சரிசெய்து விடுகிறதாம்.

புகைப்பது மற்றும் புகைக்கும் இடங்களில் இருப்பது இரண்டுமே இவ்வாறான விளைவுகளை வெளிப்படுத்தும் என்று தான் நாம் அறிந்துள்ளோம். ஆனால் இந்த புதிய ஆய்வில், மாறுபட்ட மரபணு அதை தவிர்க்க செய்கிறது என்பது ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கிறது.

மாறுபட்ட மரபணு ஏறத்தாழ புகையால் ஏற்படும் புற்றுநோயை 11% வரையிலும் குறைக்கிறது என மோர்கனின் புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தம் கூட குறைகிறதாம்.

மரபணு ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் இன்றைய தினத்தில் ஆராய்ச்சியாளர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருப்பது மரபணு தான். இன்னும் முப்பது வருடங்களில் எனக்கு ஒரு சச்சின், ஒரு பில்கேட்ஸ், ஒரே செரீனா வில்லியம்ஸ் என கேட்டு குழந்தைகள் பெரும் நிலை கூட வரலாம். ஏனெனில், மரபணுவை பிரித்து மேய்ந்துவிட்டு அதன் மூலம் பெரும் லாபம் அடைய பெருநிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன.

PREV
click me!

Recommended Stories

Winter Tips : குளிர்காலத்தில் சளி அடிக்கடி வருதா? இந்த உணவுகளை உடனே ஒதுக்கிவிடுங்க
Thyroid Belly : தைராய்டால் வந்த அதிக எடை, 'தொப்பை' அற்புத மூலிகை பானம்! எப்படி தயார் செய்யனும்?