குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினமும் ஒரு கீரை சேர்ப்பது அவசியம்…

 
Published : Oct 11, 2017, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினமும் ஒரு கீரை சேர்ப்பது அவசியம்…

சுருக்கம்

It is important to add a spinach everyday in the diet to grow kids healthy ..

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினமும் ஒரு கீரை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ரத்த சோகை பிரச்சினைக்கும் சிறந்த தீர்வு இந்தக் கீரை தான்.

கீரைகள் குறுகிய காலப் பயிர் வகை என்பதால், ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் கீரைகளைத் தேர்ந்தெடுக்கலாம். கீரைகள் பிரெஷ்சாக இருக்க வேண்டும். வாடி வதங்கி இருக்கக் கூடாது. பூச்சிகள் அரித்த கீரையைத் தவிர்த்திடுங்கள்.

கீரைகளை வாங்கிய பின் 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால், அதில் உள்ள மண் போகும், பூச்சிக்கொல்லியின் வீரியம் குறையும். பூச்சிகள், கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், மாசு போன்றவற்றால் கீரைகள் பாதிக்கப்பட்டு வளர்வதால், கீரைகளை சமைப்பதற்கு முன், நீரில் நன்றாகக் கழுவுவது அவசியம்.

கீரைகளைப் பொரிக்கவோ, நீண்ட நேரம் வேக வைக்கவோ கூடாது. அதே நேரம், போதுமான அளவு வெந்திருக்க வேண்டும். கீரைகளை வேக வைக்க, சிறிது அளவு நீர் ஊற்றினாலே போதும்.

மழை, வெயில் என அனைத்துக் காலங்களிலும் கீரைகளை சாப்பிடலாம். ஆனால், அதன் இயல்பைப் பொறுத்து கீரைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துகள் மிகுதியாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.

கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. அப்படி சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்சினைகளையும் உருவாக்கும்.

கீரையைவிட பருப்பின் அளவு குறைந்திருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க