என்ன வெங்காயத்தை பாக்கெட்டில் வச்சா ஹீட் ஸ்ட்ரோக் பிரச்சனை வராதா? என்னனு தெரிஞ்சுக்க இதை படிங்க...!!

By Kalai Selvi  |  First Published May 19, 2023, 7:02 PM IST

கோடை வெயில் தாக்கத்தால் பலர் ஹிஸ்டரி பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர் இப்ப பிரச்சனையில் இருந்து விடுபட வெங்காயம் உங்களுக்கு உதவுமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க...


இந்த கோடை வெயில் நம்மை வாட்டி வதக்கிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதால் மதியம் கூட வீட்டை விட்டு செல்வது கடினமாக இருக்கிறது. இதனால் பலர் ஹீட் ஸ்டாக் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஹிட் ஸ்டோக்கில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள வெங்காயம் சிறந்ததாகும். வெங்காயத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் ஹிட் ஸ்டோக் வராது என்று நம் முன்னோர்கள் சொல்லி இருந்தனர் ஆனால் இது எந்த அளவில் உண்மை என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் ஹிட் ஸ்டோக்கிற்கும், வெங்காயத்திற்கும் என்ன தொடர்பு என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வெங்காயம் பாக்கெட்டில் வைத்தால் ஹீட் ஸ்ட்ரோக் வராதா? : 
முற்காலத்தில் வாகன வசதி ஏதும் கிடையாது. வெகு தூரம் நடந்தே செல்லுவதுண்டு. இதனால் கோடை காலத்தில் மக்கள் வெங்காயத்தை பாக்கெட்டில் வைத்துக் கொள்வார்கள். வெங்காயத்தில் ஆவியாகும் எண்ணெய் உள்ளது. இது உடல் வெப்பநிலையை இயல்பாக்க உதவுகிறது. பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் வெப்பத் தாக்கம் குறையும் என்று மக்கள் நம்பினர். வெங்காயத்தை பாக்கெட்டில் வைத்திருப்பதால் எந்த பலனும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். வெங்காயத்துடன் பயணம் செய்தால் உஷ்ண தாக்கம் வராது என்பது தவறான கருத்து, அதற்கு பதிலாக வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Tap to resize

Latest Videos

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது? : 
வெங்காயத்தை உட்கொள்வதன் மூலம், வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது. வெயிலில் இருந்து காக்க வெங்காயம் உதவுகிறது என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது. ஆயுர்வேத மருத்துவர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தை சீரகப் பொடி மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் வெப்ப பக்கவாதம் வராமல் தடுக்கலாம். சீரகத்தையும் வெங்காயத்தையும் வறுத்து அரைக்கவும். பிறகு தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். வெங்காயத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இவை இரண்டும் நீரிழப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். பச்சை வெங்காயம் உணவை ஜீரணிக்க உதவுகிறது. இதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. எனவே, தினமும் ஒரு நடுத்தர அளவிலான பச்சை வெங்காயத்தை சாப்பிடுங்கள்.

ஹீட் ஸ்ட்ரோக் வராமல் பாதுகாக்கும் உணவு முறை: 
கோடையில் ஹீட் ஸ்ட்ரோக்கைத் தவிர்க்க முடிந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நாள் முழுவதும் குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீரைக் குடிக்கவும். கோடையில் தினமும்  பழங்கள், காய்கறிகள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ள வேண்டும். இவற்றில் நீர்மட்டம் அதிகமாக உள்ளது. மேலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது. எனவே, ஆரஞ்சு, அன்னாசி, தர்பூசணி, திராட்சை போன்ற பழங்களை தினமும் உட்கொள்ளுங்கள்.

வெங்காயத்துடன் புதினா மற்றும் வெள்ளரிக்காய் சேர்க்க வேண்டும். இவற்றை சேர்த்து சாலட் செய்து சாப்பிட வேண்டும். இது உடலை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. தயிர், மோர் அல்லது லஸ்ஸியையும் சாப்பிடலாம். இதனால் உடல் குளிர்ச்சியடைகிறது. செரிமானம் எளிதாகும். உங்கள் உணவில் மிளகுக்கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும். உயர் இரத்த சர்க்கரை வெப்ப பக்கவாதம் ஆபத்தை அதிகரிக்கிறது. எனவே சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 

இதையும் படிங்க: Heat pumps: அடிக்குற வெயிலுக்கு சூட்டுக் கொப்புளம் வருதா? இந்த பாட்டி வைத்தியத்த செய்தால் உடனே போய்டும்..!

இந்த விஷயத்திற்கும் முன்னுரிமை கொடுங்கள்: 
சூரியன் அதிகமாக இருப்பதால், உணவுடன் வேறு சில விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். வெறும் வயிற்றில் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். வெள்ளை அல்லது லேசான ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும் போது குடை, காட்டன் கைக்குட்டை, துண்டு ஆகியவற்றை வைத்துக்கொள்ளவும்

click me!