
சாப்பாட்டில் உப்பு இல்லை என்றால் நன்றாகவே இருக்காது, ஆனால் அதுவே அதிகமாகிவிட்டால் பெரிய ஆபத்து. அதிகப்படியான உப்பு இரத்த அழுத்தத்தை மட்டும் கூட்டுவது இல்லை, சத்தமில்லாமல் உங்கள் சிறுநீரகத்தையும் பாழாக்கிவிடும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு மேல் உப்பு சாப்பிடவே கூடாது. ஆனால் இப்போது இருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பாஸ்ட் புட் பழக்கத்தால், நாம் அனைவரும் அதைவிட அதிகமாகத்தான் உப்பு சாப்பிடுகிறோம்.
இதனால், உடம்பில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி, திரவ சமநிலையைப் பராமரிக்கும் சிறுநீரகத்திற்கு அழுத்தம் அதிகமாகிறது. இதில் பயமான விஷயம் என்னவென்றால், சிறுநீரக நோய் பெரும்பாலும் எந்த அறிகுறியும் இல்லாமலேயே உடம்பிற்குள் வளரும்.
நம் சிறுநீரகம்தான் உடம்பின் இயற்கை வடிகட்டி. அதுதான் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றுகிறது. நாம் அதிகமாக உப்பு சாப்பிடும்போது, இரத்தத்தில் சோடியத்தின் அளவு அதிகமாகிறது. இந்த அதிகப்படியான சோடியம், இரத்தத்தில் அதிக நீரைக் இழுக்கும். இதனால் இரத்தத்தின் அளவு அதிகமாகி, இரத்த அழுத்தம் (Blood Pressure) அதிகமாகிறது. இந்த உயர் இரத்த அழுத்தம், நாளடைவில் சிறுநீரகத்தில் உள்ள சிறிய சிறிய இரத்தக் குழாய்களைச் சேதப்படுத்துகிறது.
இதையும் படிங்க: liver disease: மது மட்டுமல்ல: கவனிக்காமல் போகும் கல்லீரல் நோய்க்கான மறைமுக காரணங்கள் என்ன?
உப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்
உப்பு, இரத்த அழுத்தம், சிறுநீரக ஆரோக்கியம் - இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டது. தொடர்ந்து அதிகமாக சோடியம் சாப்பிடுவதால் வரும் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகத்திற்குப் பயங்கரமான அழுத்தத்தைக் கொடுக்கும். அதிகப்படியான உப்பு, சிறுநீரகத்தின் செயல்பாட்டை வேகமாகக்குறைத்துவிடும். அதுமட்டுமில்லாமல், சிறுநீரின் ரசாயன அமைப்பை மாற்றி, சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்தையும் இது அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் எந்த வலியோ, அறிகுறியோ இல்லாததால், நோய் தீவிரமாகும் வரை பலருக்கும் இது தெரியாமலேயே போய்விடுகிறது.
உணவில் மறைந்திருக்கும் உப்பு
நாம் சமையலில் வேண்டுமானால் உப்பைக் குறைவாகப் போடலாம். ஆனால், நமக்குத் தெரியாமலேயே பல உணவுகள் மூலமாக உடம்பிற்குள் அதிக சோடியம் செல்கிறது. முக்கியமாக இந்த மாதிரியான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு அதிகமாக இருக்கும்:
இதையும் படிங்க: fitness : தினமும் 20 Squats செய்தால் உடலில் என்ன மாற்றம் ஏற்படும்? தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய நன்மைகள்
சாப்பாட்டின் சுவை குறையாமல் உப்பதைத் தவிர்க்க சில வழிகள் இருக்கின்றன. இந்த முறைகளை நீங்கள் பின்பற்றலாம்: