
கொலஸ்ட்ரால் மெழுகு போன்ற ஒரு பொருள். அவரவர் உடலே கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்து கொள்ளும். உணவிலிருந்து கொலஸ்ட்ராலை உடல் எடுத்துக்கொள்ளும். அசைவ உணவு, முட்டை இவற்றில் கொலஸ்ட்ரால் கிடைத்து விடும்.
கொலஸ்ட்ரால் உடலுக்கு அவசியமானதே உடல் திசுக்களை வளர்ப்பதுக்கும், சில ஹோர்மோன்கள் உற்பத்திக்கும் கொலஸ்ட்ரால் அவசியமாகின்றது. ஆனால் இதனை உடலே உற்பத்தி செய்து கொள்ளும்.
உணவில் அதிக கொலஸ்ட்ரால் சேரும் பொழுது ஆரோக்கியமற்ற கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கின்றது. இதன் காரணமே இருதய பாதிப்பு, பக்கவாதம் ஏற்படுகிறது. நிறைவுள்ள கொழுப்பு நிறைத்த உணவுகளாலும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து இதே பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உங்கள் உணவில் 20, 25 சதவீதம் நல்ல கொழுப்பால் ஆன உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். நிறைவு பெறாத கொழுப்பு பல நிறைவு பெறாத கொழுப்பு, ஒமேகா இவைகளை அளவோடு உண்ணும் பொழுது உடல் ஆரோக்கியமாகவே இருக்கின்றது.
கெட்ட கொழுப்பை அழித்து நல்ல கொழுப்பை வளர்த்து ஆரோக்கியமாக இருக்க என்ன செய்யணும்?
** சிறிய குட்டி குட்டியான உணவாக நாள் ஒன்றுக்கு ஆறுமுறை சாப்பிடுங்கள்.
** இளவயதினர் என்றால் ஜாகிங் தினமும் செய்யுங்கள்.
** உங்கள் உணவு தட்டை சிறியதாக உபயோகிங்கள்.
** நீலநிற தட்டை பயன்படுத்துங்கள். இதற்கு உணவு உண்ணும் ஆவலை குறைக்கும் தன்மை உள்ளதாம்.சிகப்பு, மஞ்சள் நிறத்திற்கு உணவு உண்ணும் ஆவலை தூண்டும் தன்மை உள்ளதாம்.
** வேர்க்கடலையை தோல் உரித்து சாப்பிடுங்கள். அப்பொழுது குறைவாக உண்பீர்கள். மேலும் இதை உப்பின்றி சாப்பிட பழகுங்கள்.
** சர்க்கரை இல்லாத சூயிங்கம் மெல்லுங்கள். புதினா வாசனையுடைய சூயிங்கமாக இருக்கட்டும். புதினாவின் மணம் மூளைக்கு சாப்பிடுவது போதும் என்ற சிக்னல் கொடுத்து விடும்.
** உப்பில்லா பிஸ்தா சிறிது சாப்பிடுங்கள்.
** யோகாவிற்கு உடல் கொழுப்பை குறைக்கும் ஆற்றல் உண்டு. எனவே யோகா பழகுங்கள்.
** வாரம் ஒரு நாள் ஒரு வேலை உபவாசம் இருங்கள்.
** காலை உணவு ஓட்ஸ், முட்டை என இருக்கட்டும்.
** நன்கு தண்ணீர் குடியுங்கள்.
** படுக்கையில், சோபாவில் உட்கார்ந்து சாப்பிடாதீர்கள். சாப்பிடும் போது மேஜையிலோ அல்லது தரையிலோ அமர்ந்து சாப்பிடுங்கள்.
** பொரித்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
** டீ, கீரின் டீ இரண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
** சர்க்கரையை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
** ஆசையை தூண்டும் நொறுக்குத் தீனிகளை வீட்டில் வைக்கவே வைக்காதீர்கள்.
** நார்சத்து உணவாகவே சாப்பிடுங்கள்.
** நீங்கள் உண்ணுவதை அன்றாடம் எழுதி இரவில் பாருங்கள். உங்களை திருத்திக் கொள்ள இது பெரிதும் உதவும்.
** காலை உணவை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.