இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு மொபைல் போன் காட்டி தான் உணவு ஊட்டுகிறார்கள். அப்போதுதான் குழந்தைகள் உணவு அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் இது தவறு. ஏன் தெரியுமா?
தற்போது ஸ்மார்ட்போன் ஆதிக்கம் மக்கள் மத்தியில் தலை விரித்தாடுகிறது. எங்கோ நடந்த வினோதங்கள் நம் முன் தோன்றுவதற்கு செல்போன்களே காரணம். செல்போன் மூலம் எத்தனையோ நன்மைகள் உள்ளன.. பக்கவிளைவுகளும் உண்டு. சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி உள்ளனர். ஏன் இன்னும் சொல்லப் போனால் சிறு குழந்தைகள் கூட இதற்கு அடிமை தான். காரணம் அவர்கள் போனைக் காட்டினால்தான் சோறு சாப்பிடுகிறார்கள்.
அதன் படி ஆய்வு ஒன்றில், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 90 சதவீதம் பேர் செல்போனைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதாக தெரியவந்துள்ளது. இப்படி சாப்பிட்டால் தான் அவர்கள்
நிரம்ப சாப்பிடுகிறார்கள் என்று குழந்தைகளின் தாய்மார்கள் நினைக்கிறார்கள், ஆனால் இது எவ்வளவு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். இந்த முறை படிப்படியாக குழந்தைகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அவற்றை குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
குழந்தைகள் போன் பார்த்து சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்:
கண்கள் பலவீனமாகின்றன: ஸ்மார்ட்போன்களை அதிகம் பார்த்தால் குழந்தைகளின் கண்கள் பலவீனமாகிவிடும். இதன் விளைவாக, அவர்கள் இளம் வயதிலேயே கண்ணாடி போட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். அதுமட்டுமின்றி, குழந்தைப் பருவத்திலிருந்தே ஸ்கிரீனிங்கை நெருக்கமாகப் பார்ப்பதால் விழித்திரை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இதையும் படிங்க: அந்நியர்களை கண்டால் குழந்தைகள் பயப்படுகிறார்களா? இப்படி அவுங்களை ட்ரீட் பண்ணுங்க!
உறவில் மோசமான விளைவு: குழந்தைகள் செல்போன் பார்ப்பது மற்றும் சோறு சாப்பிடுவது தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். சோறு சாப்பிடும் போது அம்மாவைப் பார்ப்பதில்லை. அவர்களுக்கிடையேயான பிணைப்பு காணாமல் போகும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகள் விரல் சூப்புவதை நிறுத்த சூப்பரான டிப்ஸ்..!!
தாமதமான செரிமானம்: போனை பார்த்துக்கொண்டே சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. இதனால் உணவு செரிமானம் ஆவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு மலச்சிக்கல், வாயு, வயிற்று உப்புசம், வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உணவு சுவையாக இருக்காது: மொபைலைப் பார்த்துக்கொண்டு என்ன சாப்பிடுகிறார்கள்? என்று அவர்களுக்கு தெரிவதில்லை. எதையாவது சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் இருக்கும். குறிப்பாக உண்ணும் உணவின் சுவை அவர்களுக்குத் தெரியாது. உணவு நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது கூட அவர்களுக்கு முக்கியமில்லை. மேலும் அவர்கள் செல்போனைப் பார்த்துக் கொண்டே சாப்பிடும் சமயத்தில் தான் அதிக உணவு எடுத்துக்கொள்கிறார்கள். மற்ற சமயத்தில் அவ்வாறு இல்லை.
மூளையில் ஏற்படும் விளைவுகள்: குழந்தைகள் ஸ்மார்ட் போனை அதிகம் பார்த்தால்.. அதன் தாக்கம் மூளையில் தெரியும். செல்போன் பார்க்கும் குழந்தைகள் எப்போதுமே தனியாக இருப்பதையே விரும்புகின்றனர். யாரிடமும் சரியாகப் பேசுவதை விரும்புவதில்லை. இது நீண்ட காலத்திற்கு மற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.