கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சில உணவுகளின் பட்டியல் இதோ…

 
Published : Jun 07, 2017, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சில உணவுகளின் பட்டியல் இதோ…

சுருக்கம்

Here is a list of some foods that can dissolve bad cholesterol and increase good cholesterol

உடலில் கொழுப்பு அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதுதான்.

அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதுதான்.

இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர். ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.

உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பார்க்கலாம்.

பார்லி:

தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.

கத்திரிக்காய்:

கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.

மீன்:

மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.

ஆப்பிள்:

ஆப்பிள்களில் வைட்டமின் `சி' மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.

நட்ஸ்:

நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

டீ:

அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

வெங்காயம்:

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

Heart Disease : உங்களுக்கு 40 வயசா? அப்ப இந்த '3' பழக்கங்களை உடனே நிறுத்துங்க.. இதய பிரச்சனைல கொண்டு விடும்
Vitamin B12 Deficiency Habits : இந்த 'காலை' பழக்கங்களை உடனே விடுங்க! உடலில் வைட்டமின் பி12 அளவை குறைக்கும்..!