சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வெந்தயத்தின் மற்ற மருத்துவ குணங்கள் இதோ...

First Published Apr 10, 2018, 12:47 PM IST
Highlights
Here are the other medicinal properties of the filling of kidney stones ...


** அன்றாடம் வெந்தயத்தை நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால், அது நமது உடம்பில் ரத்தத்தில் உள்ள உப்பு சத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

** வெந்தயத்தை தினமும் தங்களின் உணவில் சேர்த்து கொள்வதால், நீரிழிவு, ரத்த கொதிப்பு, மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

** வெந்தயக் கீரை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. எனவே இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.

** வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாக, கண்களுக்கு குளிர்ச்சியாக இருப்பதுடன், பொடுகு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

** வெந்தயத்தை நெய்யில் வறுத்து, அதனுடன் சிறிது சோம்பு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து, அதை மோரில் கலந்து சாப்பிட்டால், பேதி, சீதபேதி போன்ற பிரச்சனைகள் வராது.

** அரிசியுடன் சிறிது வெந்தயம் சேர்த்து, அதில் பூண்டை தட்டி போட்டு கஞ்சி வைத்து குடித்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாது. இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

** வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

click me!