உங்களுக்குத் தெரியுமா? தொடர்ந்து ஆறு மணிநேரம் உட்கார்ந்திருந்தால் இதய நோய்கள் வருமாம்...

First Published Apr 9, 2018, 1:31 PM IST
Highlights
Do you know If you continue to sit for six hours you will get heart disease ...


 


இக்காலத்தில் நின்று கொண்டே வேலை பார்ப்பவர்களை விட, உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்கள் தான் அதிகம். 

கம்ப்யூட்டர் முதல், சாலையோரத்தில் காலணி தைப்பவர் வரை அனைவரும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்கிறார்கள். உடலுக்கு தசை இயக்கம் நடக்கிறமாதிரி உழைப்பு கொடுத்துக்கிட்டே இருந்தால் தான் நீண்ட ஆரோக்கியத்தோடு வாழ முடியும்.

ஒருவர் தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் உட்கார்ந்துக்கிட்டே இருந்தால் நிமிடத்திற்கு 1 கலோரி எரிய ஆரம்பிக்கும். அதோடு ரத்த குழாயும் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் டைப் 2 டயாபடிஸ் வர ஆரம்பிக்கும். 

தொடர்ச்சியாய் 2 வாரங்களுக்கு 6 மணி நேரம் உட்கார்ந்திருந்து வேலை செய்தால் கொழுப்பை கரைக்கும் நொதிகள் சுரப்பது குறையும். கெட்டப் கொழுப்பு எரிபடாமல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

ஒரு வருடத்திற்கு பிறகு எலும்பு வளர்ச்சி குறையவதோடு, அடர்த்தியும் குறையும். உடலில் இயக்கம் இல்லாதபோது போதிய ரத்தம் மூளைக்கு செல்லாது.

இதன் காரணமாக செல் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும். இதன் விளைவாக இளமையிலேயே முதிய தோற்றம் உண்டாகும் வாய்ப்பு இருக்கும். ஹார்மோன் சுரப்பதும் பாதிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து 10 முதல் 20 வருடங்களுக்கு பிறகு இதய நோய்கள், பக்க வாதம் உள்பட பல உபாதைகள் உண்டாகும்.

விரைவில் மரணம் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் அமையும். இப்படி தொடர்ந்து அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு 64 சதவிகித இதய நோய்கள் உண்டாகிறது.  30 சதவிகிதம் ப்ரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் வருகிறது.

click me!