தொடைகளை வலிமையாக்கவும், சதையை குறைக்கவும் சூப்பரான பயிற்சி இதோ…

 
Published : Sep 30, 2017, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
தொடைகளை வலிமையாக்கவும், சதையை குறைக்கவும் சூப்பரான பயிற்சி இதோ…

சுருக்கம்

Here are some tips on how to make thighs stronger

தொடைகளை வலிமையாக்கவும், சதையை குறைக்கவும் சூப்பரான பயிற்சி உள்ளது. இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

முன், பின் தொடையை வலிமையாக்கவும், சதையை குறைக்கவும் உதவும் பயிற்சிகள் ஐஸோடானிக், ஐஸோமெட்ரிக் என்று இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1.. ஐஸோமெட்ரிக்

இந்த பயிற்சியின்போது குறிப்பிட்ட நிலையில் நிறுத்தி, தசைகளுக்கு இறுக்கம் தந்து வலு சேர்ப்பது ஐஸோமெட்ரிக். இது முன் தொடையை வலிமையாக்கும்.

2.. ஐஸோடானிக்

தசைக்கும் மூட்டுக்கும் தொடச்சியாக அசைவு கொடுத்து வந்தால் அது ஐஸோடானிக். இது பின் தொடையை வலுப்படுத்தும்.

இந்தப் பயிற்சிகளை சாப்பிட்ட ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு செய்வதே நல்லது. காரணம், உண்ட பின்பு ஒன்றரை மணி நேரம் வரை நமது உடல் உணவைச் செரிக்கவே முக்கியத்துவம் கொடுக்கும்.

எப்படி செய்வது?

விரிப்பில் நேராக நிற்க வேண்டும். வலது முழங்காலைப் பின்புறம் மடக்கி, வலது கையால் கணுக்காலைப் பிடித்தபடி 10 முதல் 30 நொடிகள் அப்படியே நிற்க வேண்டும்.தேவைப்பட்டால், மற்றொரு கையை சுவரில் ஊன்றிக் கொள்ளலாம்.

அதேபோன்று இடது காலையும் பின்புறம் மடக்கி பிடித்து நிற்க வேண்டும்.

இடது, வலது காலுக்கு என முறையே 15 முதல் 20 தடவை செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் ஒற்றை காலில் நிற்பது சற்று கடினமாக இருக்கும். அப்போது சுவற்றை பிடித்து கொள்ளலாம். நன்றாக பழகிய பின்னர் சுவற்றை பிடிக்காமல் செய்ய வேண்டும்.

இப்படி செய்வதால் முன்பக்கம், பின்பக்கம் தொடைகள் வலுவாகவும், சதைகளை குறைக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க