உங்களுக்குத் தெரியுமா? வயிற்றுப் புண்ணை குணமாக்க வாழைப்பூ துவையல் உதவும்…

 
Published : Sep 28, 2017, 02:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
உங்களுக்குத் தெரியுமா? வயிற்றுப் புண்ணை குணமாக்க வாழைப்பூ துவையல் உதவும்…

சுருக்கம்

Do you know Banana stomach helps to stomach ulcer ...

வாழைப்பூவை வைத்து கூட்டு, பொரியல், வடை செய்து இருப்பீங்க. இன்று வாழைப்பூவை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் வாழைப்பூ துவையல்

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ (ஆய்ந்த மடல்) – 20,

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,

உளுந்தம்பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 2,

உப்பு – தேவையான அளவு,

பெருங்காயத்தூள் – சிறிதளவு,

எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

* வாழைப்பூவைப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.

* பிறகு அந்த கடாயில் வாழைப்பூவைச் சேர்த்து வதக்கவும்.

* வறுத்த பொருட்கள் அனைத்து ஆறியதும் புளி, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உளுந்தம் பருப்பு, உப்பு, வாழைப்பூ சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.

* சத்து நிறைந்த வாழைப்பூ துவையல் ரெடி.

குறிப்பு: வாழைப்பூ வயிற்றுப்புண்ணை முழுமையாக குணமாக்கும்.

PREV
click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
கல்லீரலை நாசமாக்கும் 7 மோசமான உணவுகள்