
1.. நெல்லிக்காய் 5, மருதாணி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, 2 லவங்கம் இவற்றைத் தனித்தனியே அரைத்துச் சாறெடுத்து ஒன்றாகக் கலக்குங்கள்.
இதனுடன் 3 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்து தண்ணீர் விட்டு அலசுங்கள்.
வாரம் ஒரு முறை இதுபோல் செய்துவந்தால் இளநரை நெருங்காது.
2.. இரும்புச் சத்து அதிகம் உள்ள பேரீச்சைப் பழம், ஆம்லா எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
3.. நெல்லிக்காய், கறிவேப்பிலை, பிஞ்சு கடுக்காய் இந்த மூன்றையும் சம அளவு எடுத்து இடித்துக்கொள்ளுங்கள். இவை மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணெய் எடுத்து காய்ச்சி அதில் மூன்றையும் ஊறவிடுங்கள். தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் இந்த எண்ணெயை லேசாகச் சூடு செய்து, தலையில் தேய்த்து சீயக்காய் போட்டு அலசலாம். இளநரையும் இருந்த இடம் தெரியாது. முடியும் கறுப்பாகும்.
4.. நெல்லி முள்ளி, கறிவேப்பிலை, வேப்பங்கொட்டை, பிஞ்சு கடுக்காய், அவுரி விதை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து நைஸாகப் பொடிக்கவும். இதில் ஆலிவ் ஆயிலை விட்டு வெயிலில் வைத்து எடுக்கவும். இந்த எண்ணெயைத் தினமும் தடவிவந்தால், இளநரை மறைந்து, கருகருப்பாக முடி வளரும்.