
பாரம்பரியமான கூந்தல் பராமரிப்பு முறைகள்
சீயக்காய், அரப்பு, செம்பருத்தி இலை, வெந்தயம் இவற்றை பயன்படுத்தி ஆளை மயக்கும் ஆறடி கூந்தல் வளர்த்தனர் நம் பெண்கள்.
இதோ நீங்களும் அடர்த்தியான கூந்தல் வளர்க்க டிப்ஸ்…
சீயக்காய் பொடியுடன் உலர்ந்த எலுமிச்சம் பழத்தோல் வெந்தயம் பசசைப்பயறு காயவைத்த செம்பருத்தி இலை இவைகளைக் கொஞ்சம் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதைத் தலைக்கு உபயோகித்தால் தலைமுடி நன்கு செழுமை அடைவதுடன் நன்கு கருமையாகவும் இருந்து வரும்.
உங்கள் தலைமுடியை வாரிக்கொள்ள தனியாக சீப்பு வைத்துக் கொள்ளுங்கள். அதில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தலையில் சிறிது அழுக்கு சேர்ந்தாலும் பொடுகு வரத்தொடங்கிவிடும். முன்சொன்ன சீயக்காய் கலவை முற்றிலும் பொடுகை கலைந்து விடும்.
தலைக்கு எண்ணெய் தடவும் போது விரல் முடியின் வேர்க்கால்களை மெல்லிய அழுத்தத்துடன் மெல்ல வாருங்கள். இது வேர்பகுதிக்கு புத்துணர்வைப் பிறப்பிக்கும்.
முடியின் நுனிப் பகுதிகளையும் நன்கு கசக்கி எண்ணெய் பூசுங்கள். அவ்வப்போது நுனிப் பகுதி வெடித்து விட்டால் அந்தப் பகுதியை வெட்டி விடுங்கள்.
கறிவேப்பிலை மருதாணி இவைகளை அரைத்து அடைதட்டிக் கொள்ளுங்கள். பின்பு அதனை சுத்தமான தேங்காய் எணணெய்யில் ஊறவிடுங்கள். இப்போது அதை தேய்த்து வாருங்கள். இதற்கு மேலும் சிறந்த தைலம் உங்களுக்குக் கிடைக்கப் பெறாது. அந்தளவுக்கு அதன் பயனிருக்கும்.
கறிவேப்பிலையில் இரும்புச் சத்து மிகுதி. அதனால் அதை அடிக்கடி உணவில் துவையலாகச் சேரத்து வரலாம். பீட்ரூட் தக்காளி சுண்டைக்காய் இவையெல்லாம் தலைமுடிக்கு உகந்தது. இவற்றை அதிகம் உணவில் சேரத்துக் கொள்ளுங்கள்.