குழந்தைக்கு அடிக்கடி ஹெல்த் டிரிங்க்ஸ் கொடுக்குறீங்களா? அதனால் வரும் பாதிப்புகள் தெரியுமா?

By Ma riya  |  First Published May 1, 2023, 4:25 PM IST

குழந்தைகளுக்கு அடிக்கடி ஹெல்த் டிரிங்க்ஸ் கொடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 


குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக பெற்றோர் பல முயற்சிகள் எடுக்கின்றனர். அதில் ஹெல்த் டிரிங்க்ஸ் வாங்கி கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இப்போது சந்தைகளில் பல சுவைகளில் ஹெல்த் டிரிங்க்ஸ் கிடைக்கின்றன. உண்மையில் இவை குழந்தைகளின் உடல்நலனை மேம்படுத்துகின்றனவா? குழந்தை நல நிபுணர்கள் என்ன சொல்கின்றனர். 

உயரம் அதிகரிக்க சில பானங்கள் விற்கப்படுகின்றன. சிலர் குழந்தைகளின் உயரத்தை விரைந்து அதிகப்படுத்த அதை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் உயரத்திற்கும், ஊட்டச்சத்து பானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். டாக்டர் சவுரப் கன்னா (Neonatology and Pediatrics) கூறுகையில், "எல்லா ஹெல்த் டிரிங்க்ஸும் 'ஆற்றல் மற்றும் வைட்டமின்ஸ்' காணப்படும் டிரிங்க்ஸ் என்றுதான் மக்களிடம் விளம்பரம் செய்யப்படுகின்றன. ஆனால் அதில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவு குழந்தைகளுக்கு தேவைப்படுவதை விடவும் அதிகமாக உள்ளது. இது குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் என எங்கும் குறிப்பிடாமல் விட்டுவிடுகிறது நிறுவனம். 

Tap to resize

Latest Videos

அதுமட்டுமில்லை, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி, உயரம், வலிமை ஆகியவற்றை இந்த ஹெல்த் டிரிங்க்ஸ் கூட்டும் என்றும் விளம்பரங்கள் கூறுகின்றன. உண்மையான விஷயம் என்னவென்றால் ஹெல்த் ட்ரிங்க்ஸ், எனர்ஜி டிரிங்க்ஸ்களால், நோய் எதிர்ப்பு சக்தியை துளியும் கூட்ட முடியாது. இதை சாத்தியப்படுத்த இம்யூனிசேஷன் அல்லது தடுப்பூசிகளால் மட்டுமே முடியும்"என்றார். 

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் மருத்துவர் பரிந்துரையில் சப்ளிமென்ட்ஸ், குறிப்பிட்ட ஹெல்த் டிரிங்க்ஸ்களை குழந்தைக்கு கொடுக்கலாம். பெற்றோரால் குழந்தைக்கு உணவு மூலமே ஊட்டச்சத்தை கொடுக்க முடிந்தால் அவை தேவைபடாது. நீண்ட காலத்திற்கு ஹெல்த் டிரிங்ஸை குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்.  

பாதிப்புகள் 

  • ஹெல்த் டிரிங்க்ஸில் உள்ள ப்ராசஸ்டு சுகர்ஸ் குழந்தைகளுக்கு நீரிழிவு, உடல் பருமன் ஆகிய ஆபத்தை உண்டாக்கும். 
  • ஹெல்த் ட்ரிங்ஸ் குடிக்கும் குழந்தைக்கு பசிப்பதில்லை. இதனால் வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கும். 
  • ஹெல்த் டிரிங்ஸ்களில் இருக்கும் இனிப்பு, சாக்லேட் சுவைக்கு குழந்தைகள் அடிமையாகும் வாய்ப்புள்ளது. 
  • ஹெல்த் ட்ரிங்க்ஸ் மட்டுமின்றி குழந்தைகள் விரும்பி உண்ணும் ஜாம்ஸ், ஜெல்லிஸ், கேக், மிட்டாய்கள், பிஸ்கட்ஸ் போன்றவையும் சர்க்கரை உள்ளவைதான். இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். 

இதையும் படிங்க: வீட்டிற்கு பாம்பு வருவது நல்லதா? கெட்டதா?

குழந்தைகள் ஆரோக்கியம் 

  1. பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து வீட்டில் செய்த ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை குழந்தைகளுக்கு பழக்க வேண்டும். 
  2. வீட்டில் சிறுதானியங்களில் தின்பண்டங்கள் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 
  3. வீட்டில் செய்யும் மேங்கோ ஷேக், மில்க் ஷேக், வாழைப்பழ ஷேக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும். 

இதையும் படிங்க: ரோஸ்வாட்டருக்குள் இவ்வளவு ரகசியங்களா? ஒரே நாளில் முகம் பளிச்சுன்னு பேரழகு பெற.. சிம்பிள் பேஸ் பேக் ரெடி

click me!