எச்சரிக்கை: அதிகரிக்கும் சைலன்ட் ஹார்ட் அட்டாக்... இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம் தேவை..!!

By Kalai Selvi  |  First Published May 1, 2023, 11:56 AM IST

ஹார்ட் அட்டாக் குறித்து நாம் அனைவரும் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் சைலன்ட் ஹார்ட் அட்டாக் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இது குறித்து இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..


முன்பெல்லாம் எங்கோ ஓரிடத்தில் மாரடைப்பினால் உயிரிழப்புகள் ஏற்படும். ஆனால் இப்போது நாளொன்றுக்கு கேள்விப்படும் அளவுக்கு அதகிமாகிவிட்டது. இதற்கு பல்வேறு அடிப்படை காரணங்கள் அடிகோடிட்டு காட்டப்பட்டாலும், மாரடைப்பை தடுப்பதற்கான சிறந்த மருத்துவ வழிமுறைகள் எதுவும் இப்போது இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றம் மட்டுமே இதற்கு சிறந்த வழி என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக உடற்பயிற்சி, உணவு முறை ஆகியவற்றில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.

சைலண்ட் ஹார்ட் அட்டாக்:

Latest Videos

undefined

இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் போது தான் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. ரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் மற்றும் பிற பொருட்கள் குவிந்து இருப்பதால் ரத்த ஓட்டத்தை எடுத்து செல்லும் தமனிகளில் ஒரு தடையை உண்டாக்குகிறது. சைலன்ட் ஹார்ட் அட்டாக்  என்பது எவ்வித அறிகுறிகள் இல்லாமல் வரும் மாரடைப்பு. சைலன்ட் ஹார்ட் அட்டாக் இருப்பது உங்களுக்கு அடிக்கடி தெரியாது. பல வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து கூட கண்டுபிடிக்க முடியாது.  மாரடைப்புகளில் உயிரிழப்போர் கிட்டத்தட்ட பாதியளவு சைலன்ட் ஹார்ட் அட்டாகால் இறக்கின்றனர் என்று ஆராய்ச்சி கூறுகிறது. 

ஆய்வு கூறுவது என்ன?

அமெரிக்க மருத்துவ சங்க இதழ் மற்றும் ஹார்வர்ட் ஹெல்த் 45 வயது முதல் 85 வயதுக்குட்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் எந்த வித இருதய நோய் இல்லாமல் மாரடைப்பால் இறந்தது தெரியவந்திருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில்
அவர்களுக்கு மாரடைப்பு வந்ததே தெரியாது. அதாவது சைலண்ட் ஹார்ட் அட்டாக்கில் 10 ஆண்டுகளுக்குள் பல்வேறு சூழ்நிலையில்
இறந்திருக்கின்றனர் என்று கூறுகிறது. அதேநேரத்தில் அவர்களிடம் எடுக்கப்பட்ட பரிசோதனையின்  முடிவில் அவர்களுக்கு மாரடைப்பு வந்ததற்கான  அறிகுறிகள் இருந்ததாக தெரிவித்திருக்கிறது. 

சைலண்ட் ஹார்ட் அட்டாக் காரணம்:

நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், முதுமை, புகைபிடித்தல், உழைப்பில்லாத வாழ்க்கை முறை, குடும்பத்தில் ஏற்கனவே இதய நோய் இருப்பது, அதிக கொலஸ்ட்ரால் போன்ற மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

அறிகுறிகள் என்ன?

மார்பு வலி, மார்பில் அசௌகரியமான உணர்வு ஏற்படுதல், பலவீனம், மயக்கம், தாடை, கழுத்து அல்லது முதுகில் வலி, கைகள் மற்றும் தோள்களில் அசௌகரியமான உணர்வு ஏற்படுதல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவையே.

இதையும் படிங்க: தொழிலாளர்களை போற்றும் 'உழைப்பாளர் தினம்' இன்று! இந்த நாளின் முக்கியத்துவம் தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ் 

மாரடைப்பை தடுப்பது எப்படி?

வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம். குறைவான உடல் உழைப்பு, சீரற்ற தூக்கம், புகையிலை பிடித்தல், மது அருந்துவது, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுதல், அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வது ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

click me!