மஞ்சள் கலந்த பாலில் பல நன்மைகள் உள்ளன, மேலும் நீங்கள் உங்களுடைய உடலை வெளியேயும் உள்ளேயும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த பால் பெரிதும் உதவுகிறது. மஞ்சள் கலந்த பாலை தங்க பால் என்றும் குறிப்பிடப்படுகிறது.
பாலில் முதன்மையான சேர்க்கை மஞ்சள் மட்டுமே. இதில் ஆண்டிஆக்சிடண்டுகள் நிறைய உள்ளன. மேலும் இந்த மஞ்சளில் கர்குமின் உள்ளது. பல்வேறு ஆயுர்வேத மருத்துவ முறையில் ஊக்கியாக இது உள்ளது. இது பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் மற்றும் வியாதிகளுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது. மஞ்சள் உடலில் நிலவும் அழற்சி நிலைகளுக்குப் பயனளிக்கும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் வலியைக் குறைக்கும். பல்வேறு உடல்நலன் சார்ந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும் போது, மஞ்சள் கலந்த பாலை குடிப்பது விரைந்து நன்மையை அதிகரிக்கும்.
மஞ்சள் பால் தயாரிக்கும் முறை
ஒரு குவளைப் பாலை அடுப்பில் பொங்க வைத்து, கேஸ் டவ்வை கம்மியாக வைத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு துளி மஞ்சளை சேர்க்கவும். உங்களுடைய சுவைக்கு தகுந்தால் போல சக்கரையை சேர்க்கலாம். உங்களிடம் இருந்தால் இந்த பாலில் குங்குமப் பூவையும் சேர்க்கலாம். அவற்றுடன் உலர்ந்த பழங்கள், நட்ஸ் மற்றும் பேரிச்சைப் பழங்களையும் சேர்த்து சமைக்கலாம். வெறும் மஞ்சள் கலந்த பாலாக மட்டுமில்லாமல், உடன் சேர்க்கப்படும் இந்த பொருட்களால் பலன்கள் மேலும் அதிகரிக்கும். இதுதவிர பட்டை மற்றும் இஞ்சியை சேர்த்து சமைப்பது சுவைக்கும், உடலில் எதிர்ப்புச் சத்துக்கும் கூடுதல் பலம் சேர்க்கும்.
ஆண்டி ஆக்சிடண்ட்
நமது உடலுக்கு ஆண்டி ஆக்சிடண்டின் தேவை முக்கியமானது. நம்முடைய உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்சி ஆண்டி ஆக்சிடண்ட் இன்றையமையாதது. செல்கள் உயிர்ப்புடன் இருந்தால் மட்டுமே, உடல் பாதுகாப்பாக இருக்கும். செல்களின் செயல்பாடு போதுமானவரை கிடைக்கும் போது, உடலுக்கு எந்தவித நோய் எதிர்ப்பு மற்றும் தொற்றுகள் ஏற்படாது. மஞ்சளில் இருக்கும் கர்குமின் என்கிற் பொருளில் நிறைய ஆண்டி ஆக்சிடண்டுகள் உள்ளது. இது பாலுடன் சேரும் போது, உடலுக்கு மேலும் நன்மைகள் கிடைக்கின்றன. நீங்கள் மஞ்சள் பாலை தயார் செய்து ஃப்ரிட்ஜின் வைத்துக்கொள்ளலாம். அதை 2 முதல் 3 நாட்கள் வரை வைத்திருக்கலாம். குடிப்பதற்கு முன் சூடுபடுத்திவிட்டு பயன்படுத்துங்கள்.
சின்ன சின்ன முயற்சிகள் கூட இருதய நலனுக்கு பெருமளவில் நல்லது சேர்க்கும்..!!
மூட்டு வலியை எதிர்த்துப் போராடுகிறது
குர்குமின் வீக்கம் மற்றும் மூட்டு வலியை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. கீல்வாதம் உள்ளிட்ட எலும்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாலில் கிடைக்கும் உயர் ரக கால்ஷியம் எலும்புகளை வலுப்படுத்துகிறது. எனவே மஞ்சள் பால் எலும்பு வலியை குறைப்பது மட்டுமல்லாமல் எலும்புகளை ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது.
நரைமுடி, செம்பட்டை முடியை கருமையாக்க இந்த ஒரு பொருள் போதும்..!!
ரத்தம் சுத்தமடைகிறது
மஞ்சள் பால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது நிணநீர் மண்டலம் மற்றும் இரத்த நாளங்களில் சேர்ந்துள்ள் அசுத்தங்களை சுத்தம் செய்கிறது. மஞ்சள் பாலை தொடர்ந்து உட்கொண்டு வருபவர்களின் ரத்தம் சுத்தமாக இருக்கும். மஞ்சள் பாலை ஐஸ் ட்ரேயில் உறைய வைப்பதன் மூலம் மஞ்சள் பால் ஐஸ் க்யூப்ஸ் செய்யலாம். இந்த கலவைக்கு, 35% பால், 15% தண்ணீர் மற்றும் 50% மஞ்சள் பயன்படுத்த வேண்டும். இந்த கலவையை ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வைக்கவும். நீங்கள் குளிர்ந்த மஞ்சள் பாலை விரும்பினால், இந்த உறைந்த க்யூப்ஸில் 2 எடுத்து குளிர்ந்த பாலில் ஒரு கப் சேர்த்துக் கொண்டு பருகி வரலாம்.
செரிமானதுக்கு உதவும்
மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், பல்வேறு செரிமான பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. வாயு, வீக்கம், நெஞ்செரிச்சல், இரைப்பை குடல் தொற்று, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் புண்கள் போன்றவை மஞ்சள் பால் குடிப்பதன் மூலம் குணமடையும். மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருந்தால், தினமும் மஞ்சள் பால் உட்கொள்வது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நிறுத்த உதவுவதாக மருத்துவ ஆதாரங்கள் கூறுகின்றன.