தினமும் காலை கம்மங்கூழ்.. 1 கிளாஸ் குடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!

Published : Feb 22, 2025, 09:59 AM ISTUpdated : Feb 22, 2025, 10:13 AM IST
தினமும்  காலை கம்மங்கூழ்.. 1 கிளாஸ் குடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!

சுருக்கம்

Kambu Koozh Benefits : தினமும் காலையில் கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.

கம்மங்கூழ் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். முந்தைய காலகட்டத்தில் அனைவரது வீட்டிலும் கம்மங்கூழ் குடித்து வந்தோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இது அரிதான பானமாக கருதப்படுகிறது.  வெயில் காலம் வரப்போகிறது. இதனால் பல அதிக வெப்பத்தால் பலவிதமான ஆரோக்கியப் பிரச்சினைகளால் அவஸ்தைபடுவார்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலானோர் உடல் சூட்டினால் ரொம்பவே கஷ்டப்படுவார்கள். உடல் சூட்டை தணிக்கை ஏராளமான பானங்கள் விற்கப்படுகின்றன. ஆனால் இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து உடலை தணிப்பதற்கு கம்மங்கூழ் தினமும் குடிப்பது ரொம்பவே நல்லது. கம்பு தானிய வகைகளில் ஒன்றாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதாவது நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் ஈ, வைட்டமின் பி, புரோட்டின்  போன்றவை உள்ளன. எனவே, தினமும் காலையில் ஒரு கிளாஸ் கம்மங்கூழ் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உடல் சூட்டை தணிக்கும்:

வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்பட்டால், இளநீருக்கு அடுத்தபடியாக சிறந்த பாரதம் எதுவென்றால் கம்மங்கூழ் தான். எனவே தினமும் காலை ஒரு கிளாஸ் கம்மங்கூழ் குடித்து வந்தால் உடலின் வெப்பநிலை அளவு அதிகரிக்காமல் சீராக இருக்கும் மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கும்.

ரத்தசோகை பிரச்சனை நீங்கும்:

கம்புவில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் கம்பங்கூழ் தினமும் குடித்து வந்தால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். இதனால் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். எனவே தினமும் ஒரு கிளாஸ் கம்மங்கூழ் குடித்து வாருங்கள்.

இதையும் படிங்க:  1 கப் கம்பு மாவு இருக்கா? சத்தான இந்த டிபன் செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!

உடல் எடையை குறைக்கும்:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கம்மங்கூழ் தினமும் காலை குடித்து வரவும். ஏனெனில், கம்புவில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது வயிறு நீண்ட நேரம் நிரம்பி வைக்கும் மற்றும் பசி எடுக்காமல் தடுக்கும். 

உயர் ரத்த அழுத்தம்:

கம்புவில் இருக்கும் பண்புகள் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் பிரச்சனையை தடுத்து உயரத்தை அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. எனவே உயரத்தை அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலை கம்மங்கூழ் குடியுங்கள்.

இதையும் படிங்க:  சர்க்கரை நோயினை விரட்ட எளிய வழி - "கம்பு கொள்ளு தோசை"

சர்க்கரை நோய்க்கு நல்லது:

கம்பங்கூழ் சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் கம்பங்கூழ் தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். முக்கியமாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது ரொம்பவே நல்லது.

நல்ல தூக்கம் வரும்:

கம்புவில் இருக்கும் ட்ரிப்டோஃபேன் உடலில் செரடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தினமும் கம்மங்கூழ் குடித்து வந்தால் மன அழுத்த பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். இதனால் இரவில் உங்களால் நிம்மதியாக தூங்க முடியும்.

எலும்புகளை வலிமையாக்கும்:

கம்புவில் கால்சியம் அதிகமாக உள்ளதால் தினமும் காலை கம்பங்கூழ் குடித்து வந்தால் எலும்புகள் வலிமையாகும் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும்.

மாதவிடாய் வலிகள் குறையும்:

கம்புவில் இருக்கும் மக்னீசியம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் வயிற்று வலி தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவிகிறது. எனவே மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் தினமும் காலை கம்மங்கூழ் குடியுங்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க