தலைவலிக்கு உடனடி நிவாரணம் வேண்டுமா? இருக்கிறதே வீட்டு வைத்தியம்..

Asianet News Tamil  
Published : Jan 23, 2017, 02:36 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
தலைவலிக்கு உடனடி நிவாரணம் வேண்டுமா? இருக்கிறதே வீட்டு வைத்தியம்..

சுருக்கம்

தலைவலிக்கு மாத்திரையை அடிக்கடி சாப்பிட்டால், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, கண்ட கண்ட மாத்திரையைப் போடுவதைத் தவிர்த்து, நம் வீட்டில் எளிய வைத்தியங்களை மேற்கொள்ளலாம்.

வெற்றிலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். கிராம்பை தூள் செய்து அதனை வெற்றிலை சாறுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, நெற்றியில் தடவினால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பசலைக்கீரையில் தலைவலியைப் போக்கத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. ஆகவே தலைவலி இருக்கும் போது பசலைக்கீரையை அரைத்து நெற்றியில் தடவினால், தலைவலி நீங்கும்.

துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து குடித்தால், தலைவலி குணமாகும்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!