முகத்தை அழகாய் வைத்துக் கொள்ள இனி அழகு நிலையம் தேவையில்லை..

 
Published : Jan 23, 2017, 02:32 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
முகத்தை அழகாய் வைத்துக் கொள்ள இனி அழகு நிலையம் தேவையில்லை..

சுருக்கம்

வீட்டிலேயே காய்கறிகள், பழங்களைக் கொண்டு அழகாய் பேஸியல் செய்து, முகப்பொலிவை பாதுகாக்கலாம்.

பஞ்சில் பாலை நனைத்து முகத்தை கீழிருந்து மேலாக துடைக்க வேண்டும். துடைத்த பின், ஒரு நிமிடம் வரை நீராவியில் முகத்தை காண்பிக்க வேண்டும்.

இப்படி செய்தால், முகத்தில் உள்ள துளைகள் திறக்கும். பேஸியல் செய்யும் போது முகத்தில் நல்ல பளபளப்பைக் கொடுக்கும்.

காய்கறிகளைப் பொறுத்தவரை, உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் வைத்து பேஸியல் செய்யலாம்.

உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைத்து, அரை ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் முல்தானிமெட்டியை சேர்த்து கலக்க வேண்டும். முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி கலவையை பூசி, 20 நிமிடங்கள் காயவிட வேண்டும். நன்றாக காய்ந்துவிடக் கூடாது. இதேபோல மற்ற காய்கறிகளையும் பயன்படுத்தலாம்.

பழங்களில் ஆஸ்திரேலிய ஆரஞ்ச், பட்டர் ப்ரூட், வாழைப்பழம், ஆப்பிள், கறுப்பு திராட்சை, பப்பாளிப் பழம், தர்பூசணி பழங்களை பயன்படுத்தலாம்.

செவ்வந்தி, பன்னீர் ரோஜா பூக்களையும், பாதாம் பருப்பு, வெள்ளை கொண்டைக் கடலையை அரைத்து, தேன், முல்தானிமெட்டி கலந்து பேஸியலாக பயன்படுத்தலாம்.

PREV
click me!

Recommended Stories

Healthy Hair : இந்த உணவுகள் '40' வயசுக்கு பின் முடி உதிர்தலை அதிகரிக்கும்; எதை சாப்பிடக் கூடாது தெரியுமா?
Butter For Glowing Skin : தேவதை மாதிரி அழகில் மிளிர 'வெண்ணெயுடன்' இந்த '1' பொருள் சேர்த்து முகத்தில் தடவுங்க! நல்ல ரிசல்ட்