க்ரீன் ஆப்பிள்கள் மூலம் கிடைக்கும் அற்புதமான பயன்கள்- முழு விபரம் இதோ..!!

By Dinesh TGFirst Published Dec 1, 2022, 1:04 PM IST
Highlights

நார்ச்சத்து மிகுந்த உணவான க்ரீன் ஆப்பிளை சாப்பிடுவது, மூளை நோய்களை எதிர்த்துப் போராட பெரிதும் உதவும். அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்களின் அறிகுறிகளைத் தடுக்கவும் க்ரீன் ஆப்பிள் உதவுகிறது.
 

பச்சை ஆப்பிளில் ஆண்டிஆக்சிடண்டுகள், நார்ச்சத்து, பல்வேறு வைட்டமின்கள், உள்ளிட்ட தாதுகள் நிறைந்துள்ளன. பச்சை ஆப்பிளில் பெக்டின் என்ற கலவை உள்ளது. இது குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதேபோன்று நுரையீரல், கணையம் மற்றும் பெருங்குடல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்கிறது. 

க்ரீன் ஆப்பிளை சாறுப் பிழிந்து குடிப்பதன் மூலம், மூளையை பாதிக்கும் நோய்களை தடுக்கலாம். இதை உணவாக சாப்பிடும் விலங்குகளுக்கு மூளையில் சமிக்ஞை செய்யும் மூலக்கூறுகள் சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது. நார்ச்சத்து மிகுந்த உணவான பச்சை ஆப்பிளை சாப்பிடுவது மூளை நோய்களை எதிர்த்துப் போராட உதவும் என்று ஆராய்ச்சி உறுதி செய்துள்ளது. அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்களின் அறிகுறிகளைத் தடுக்கவும் பச்சை ஆப்பிள் உதவுகிறது.

உடலுறவுக்கு பிறகு இப்படி செய்து பாருங்கள்- உடல்நலன் மேம்படும்..!! எதிர்ப்பு சக்தி கூடும்..!!

பச்சை ஆப்பிள்களை உட்கொள்வது ஆஸ்துமா உட்பட பல நுரையீரல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. பச்சை ஆப்பிள் சாப்பிடுவது ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் அதிக உணர்திறன் ஏற்படும் அபாயம் குறைவது தெரியவந்துள்ளது.

நடுத்தர வயது ஆண்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், ஆப்பிள் சாப்பிடுவது நுரையீரல் செயல்பாட்டில் நன்மை பயக்கும் என்று தெரியவந்துள்ளது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். ஆப்பிள்களில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பராமரிக்கவும் அதிக நார்ச்சத்து கொண்ட உணவை மருத்துவர்கள் அடிக்கடி பரிந்துரைக்கின்றனர். ஆப்பிள்கள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவாகக் கருதப்படுகிறது. பச்சை ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது எடை இழப்புக்கு உதவுகிறது. நடுத்தர வயது பெண்கள் க்ரீன் ஆப்பிள்களை சாப்பிடுவது, அவர்களுக்கு எடை இழக்க பெரிதும் உதவுகிறது. 
 

click me!