காலை உணவாக முட்டை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் அதிஅற்புத நன்மைகள்…

 
Published : Oct 13, 2017, 01:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
காலை உணவாக முட்டை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் அதிஅற்புத நன்மைகள்…

சுருக்கம்

Great benefits that we get by eating eggs in the morning ...

** முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.

** முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.

** முட்டை லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்களை அதிகமாக கொண்டுள்ளதால், இது நமது கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

** முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது.

** முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க