
வைட்டமின் டி
கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின். மற்ற வைட்டமின்களை விட இது முற்றிலும் மாறுபட்டது. மேலும் இந்த வைட்டமின் டி இயற்கையாகவே உடலில் உற்பத்தி செய்யப்படும்.
வைட்டமின் டி குறைபாட்டை அறியும் முறை
வைட்டமின் டி குறைபாட்டை இரத்த பரிசோதனையின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.
வைட்டமின் டி சத்தானது மீன்கள், பால் பொருட்கள், ஆரஞ்சு ஜூஸ், சோயா பால், செரில்கள், மாட்டின் கல்லீரல், சீஸ், முட்டை மஞ்சள் கரு போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.
ஹெர்ரிங் என்பது ஒரு வகையான கடல் மீன். இந்த கடல் மீனிலும் வைட்டமின் டி மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது.
வைட்டமின் டி பயன்கள்
வைட்டமின் டி உடலில் போதுமான அளவில் இருந்தால், அது எலும்புகளால் எளிதில் கால்சியத்தை உறிஞ்ச உதவும்.
ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு தீவிரமாக ஆரம்பித்தால், அதனால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் வைட்டமின் டி குறைபாடு குறிப்பிட்ட சில நோய்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.
உட்காயம்
வைட்டமின் டி குறைபாடு இருந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, அதனால் அடிக்கடி உடல்நல குறைவால் அவஸ்தைப்படக்கூடும்.
இதய ஆரோக்கியம்
இதய நோய் மற்றும் இரத்த அழுத்தம் வைட்டமின் டி குறைபாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே இப்பிரச்சனைகள் வராமல் இருக்க தினமும் வைட்டமின் டி கிடைக்குமாறு செய்யுங்கள்.
ஆஸ்துமா
அன்றாடம் போதிய அளவு வைட்டமின் டி சத்து உடலுக்கு கிடைத்தால், அது நுரையீரலை வலிமைப்படுத்தும் மற்றும் சுவாச பாதையில் உள்ள பிரச்சனைகளைத் தடுக்கும்.
ஆஸ்டியோபோரோசிஸ்
வைட்டமின் டி மற்றும் கால்சியம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, வலிமைப்படுத்தும். இதனால் எலும்புகள் பலவீனமாவது மற்றும் எலும்பு முறிவு ஏற்படுவது தடுக்கப்படும்.