எப்பவும் பாட்டி வைத்தியம் தான் பெஸ்ட்; பலவகை பல் பிரச்சனைகளுக்கான தீர்வுகள்…

 
Published : Oct 24, 2017, 01:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
எப்பவும் பாட்டி வைத்தியம் தான் பெஸ்ட்; பலவகை பல் பிரச்சனைகளுக்கான தீர்வுகள்…

சுருக்கம்

grandma treatment is always best

 

பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம், பல்கூச்சம், வாய்நாற்றம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பல் சம்பந்தமான பிரச்னைகள் குறையும்.

வைத்தியம் 1:

தேவையான பொருட்கள்

ஆலமரப்பட்டை, சர்க்கரை

செய்முறை:

ஆலமரப்படையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பல் நோய்கள் குறையும். ஈறுகளில் வீக்கம், ஈறுகளில் சீழ் உண்டாதல், ஈறுகளில் கட்டி ஏற்படுதல் ஆகியவற்றால் ஏற்படும் பல்வலி பிரச்னைக்கு நெல்லிக்காயை தினசரி மென்று சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும்.

வைத்தியம் 2:

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய்.

செய்முறை:

நெல்லிக்காயை கழுவி தினசரி மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள் உறுதி பெறும். பல் கூச்சம், பற்களில் கிருமிகளால் ஏற்படும் பல்வலி பிரச்னைக்கு வேப்பிலைகளை எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் எடுத்து வெயிலில் உலர்த்தி தூளாக்கி இதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் தீர்வு கிடைக்கும்.

வைத்தியம் 3:

தேவையான பொருள்கள்:

வேப்பிலை, உப்பு.

செய்முறை:

வேப்பிலைகளை எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் எடுத்து வெயிலில் உலர்த்தி தூளாக்கி இதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் குறையும். பல்லில் சீழ் வடிதலால் ஏற்படும் பல்வலி பிரச்னைக்கு கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களை தேய்த்து வந்தால் பல் வலி, பல்லில் சீழ் வடிதல் குறையும்.

வைத்தியம் 4:

தேவையான பொருள்கள்:

கருவேலம் மரப்பட்டை, கடுகு எண்ணெய், உப்பு.

செய்முறை:

கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களை தேய்த்து வந்தால் பல் வலி, பல்லில் சீழ் வடிதல் குறையும்.பல்சொத்தை மற்றும் கிருமிகளால் ஏற்படும் பல் சம்பந்தமான நோய்கள் பூந்தி கொட்டை, உப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து பல்பொடியுடன் சேர்த்து பல் தேய்த்து வந்தால் குறையும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க