தொப்பையைக் குறைக்க இந்த பானங்களில் ஏதேனும் ஒன்றைக் குடித்தாலே போதும்…

Asianet News Tamil  
Published : Oct 24, 2017, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
தொப்பையைக் குறைக்க இந்த பானங்களில் ஏதேனும் ஒன்றைக் குடித்தாலே போதும்…

சுருக்கம்

tips for reduce fat

 

இந்த பானங்களில் ஏதேனும் ஒன்றை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் டாக்ஸின்களும் வெளியேறும்.

மேலும் வெறும் வயிற்றில் அந்த பானங்களைக் குடிப்பதால், எளிதில் அந்த பானங்களில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, கொழுப்புச் செல்களைக் குறைக்கும் பணி வேகமாக்கப்படும்.

இந்த பானங்கள் எந்த ஒரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்பது நிச்சயம்.

மிளகு தண்ணீர்

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக இது குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைக்கும். மேலும் இந்த பானம் நுரையீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் உதவும்.

இஞ்சி தண்ணீர்

இஞ்சி தண்ணீர் உடலினுள் உள்ள எடையை அதிகரிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, பகல் வேளையில் கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதற்கு இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் சிறிது இஞ்சியை துருவிப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

மஞ்சள் தண்ணீர்

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் டாக்ஸின்கள் வெளியேறி, உடலினுள் அழற்சியினால் ஏற்பட்ட வீக்கம் குறையும். மேலும் மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும்.

எலுமிச்சை தண்ணீர்

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வர, அதில் உள்ள அமிலங்கள் மற்றும் இதர சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்கள் கரைய வழிவகுக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake