மலச்சிக்கல் பிரச்னைக்கு எளிய தீர்வு வழங்கும் நெய்..!!

By Asianet Tamil  |  First Published Feb 15, 2023, 11:37 PM IST

நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்களால் மலச்சிக்கல் பிரச்சனையை ஓரளவுக்கு குறைக்க முடியும். மூளையின் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் நெய் முக்கிய பங்காற்றுகிறது.
 


மலச்சிக்கல் என்பது குடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அல்லது மலம் கழிப்பதில் இருக்கும் சிரமம் உள்ளிட்டவற்றை குறிக்கிறது. வயதானவர்களிடம் இருக்கும் மலச்சிக்கல் பிரச்னையில், அவர்களுக்கு வாரத்துக்கு 3 முறை குறைவான குடல் இயக்கம் இருக்கும். ஆனால் இது ஒவ்வொரு உடலமைப்புக்கு ஏற்ப வேறுபடும். மலச்சிக்கல் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். புரோபயாடிக்குகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் பல உணவுகள் மலச்சிக்கலை எளிதாக்கவும் தடுக்க உதவுகின்றன. மலச்சிக்கல் என்பது மிகவும் பொதுவான குடல் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும், இதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் தீர்வை தரும். மலச்சிக்கலைத் தடுக்க உதவும் சில உணவுகள் என்னவென்று தொடர்ந்து பார்க்கலாம்.

தயிர் மற்றும் ஆளிவிதை

Latest Videos

undefined

தயிரில் பிஃபிடோபாக்டீரியம் லாக்டிஸ் என்ற நட்பு பாக்டீரியா உள்ளது. இது ப்ரோபயோடிக் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது. மறுபுறம், ஆளி விதைகள் கரையக்கூடிய நார்ச்சத்தின் வளமான மூலமாகும். கரையக்கூடிய நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

தொப்பையை கரைக்க உதவும் காலை உணவு..!!

நெல்லிக்காய் சாறு

காலையில் 30 மில்லி நெல்லிக்காய் சாற்றை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து சாப்பிடுவது செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்னையை தடுக்கிறது. 

நெய் மற்றும் பால்

நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்களால் மலச்சிக்கல் பிரச்சனையை ஓரளவு குறைக்க உதவுகிறது. மூளையின் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்துவதால், நெய் மூளைக்கு நல்லது என்று கருதப்படுகிறது. நெய் பியூட்ரிக் அமிலத்தின் வளமான மூலமாகும். ஒரு கப் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் நெய்யை உறங்கும் போது உட்கொள்வது, மறுநாள் காலையில் மலச்சிக்கலைக் குறைக்க ஒரு சிறந்த வழியாகும்.

click me!