தைராய்டு அடிப்படையில் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். இது உடலுக்கு தேவையான 2 முக்கிய ஹார்மோன்களை வெளியிடுகிறது. மேலும் பல்வேறு உடல் உறுப்பு செயல்பாட்டுக்கு தைராய்டு சுரப்பி இன்றியமையாததாக உள்ளது.
நம் உடலில் தைராய்டு சுரப்பியின் பங்கு சாதாரணமானது அல்ல. தைராய்டு தொடர்பான நோய்கள் மாறிய வாழ்க்கை முறையால் பலரைத் தொந்தரவு செய்யும் பிரச்சனையாக உள்ளன. தைராய்டு ஹார்மோனில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அடிக்கடி உணர்ச்சிகரமான எதிர்வினைகளையும் கோபத்தையும் ஏற்படுத்தும். எனவே, தைராய்டு பிரச்னைகளை முக்கியமாக கவனிக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
தைராய்டு அடிப்படையில் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. இந்த சுரப்பி உடலில் ட்ரையோடோதைரோனைன் (T-3) மற்றும் தைராக்ஸின் (T-4) என்கிற இரண்டு முக்கிய ஹார்மோன்களை வெளியிடுகிறது. இவை உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. இது ஹார்மோன் சமநிலை, உடல் வெப்பநிலை, இதய துடிப்பு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
undefined
ஹைப்போ தைராய்டிசத்தில், தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது. அயோடின் குறைபாடு, ஆட்டோ இம்யூன் நோய்கள், பிட்யூட்டரி கோளாறுகள், பரம்பரை அல்லது தீவிர வாழ்க்கை முறை ஏற்றத்தாழ்வுகள் காரணமாக ஹைப்போ தைராய்டிசம் பிரச்னை நிலவுகிறது. தைராய்டு சுரப்பியின் சமநிலையின்மையால் ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது. இது சோர்வு, பலவீனம், மோசமான வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
உங்களுடைய காதலன் உங்களை நிஜமாகவே காதலிக்கிறாரா..?
சரியான முறையில் தைராய்டு சுரபிகள் செயல்படுவதற்கு உணவுப் பழக்கம் முக்கிய பங்கு வகிக்கின்றன. தைராய்டு சுரபியின் அளவு கட்டுக்குள் இருப்பதற்கு கொத்தமல்லி தண்ணீரை குடித்து வரவேண்டும். மேலும் இந்த தண்ணீர் ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசத்தை கட்டுப்படுத்துவதிலும் நன்மை பயக்கிறது. கொத்தமல்லியில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. மேலும், இது உயர் இரத்த சர்க்கரை அபாயத்தை குறைக்கிறது. குறிப்பாக வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
இது தவிர, கொத்தமல்லி பல்வேறு தைராய்டு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக அறியப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பதால் தைராய்டு சுரப்பி மட்டுமின்றி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.