இவ்வுலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிர்க்கும் இருக்கக்கூடிய தலையாய பணி இனப்பெருக்கம் தான். அதற்கு பிறகு தான் மற்றவை எல்லாமே. அதனால் உடலுறவுக்கான தேவை என்பது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு ஆரோக்கியமான மனிதனுக்கும் உடலுறவு இன்றியமையாத செயல்படாகும்.
மனிதனுக்கு உடலுறவு இன்பம் என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். எனினும் ஒவ்வொருவருடைய விருப்பத்துக்கு ஏற்ப உடலுறவுத் தேவைகள் மாறுபடும். அதற்கேற்ப உடலுறவு சார்ந்து ஒருவர் வெளியிடும் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் உள்ளிட்டவையும் மாறுபடும். இது ஒவ்வொருவருடைய உளவியலை சார்ந்தது. எனினும் உடலுறவு சார்ந்த செயல்பாடுகள் இருதய நலனை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான வகையில் உடலுறவு கொள்பவர்களுக்கு ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது கிடையாது. இந்நிலையில் பாலியல் உறவு சார்ந்து சிக்கலை சந்திப்பவர்கள் தங்களுடைய உணவுமுறையில் குறிப்பிட்ட மாற்றங்களை செய்ய வேண்டும். பாலியல் சார்ந்த உணர்ச்சிகளை அதிகப்படுத்த நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்
பூசணி விதைகள்
பல ஆய்வுகளிலும், பல்வேறு கட்டுரைகளிலும் பூசணி விதைகளின் நன்மைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் அதிகளவும் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. ஆண்களுக்கு பாலியல் உடலுறவின் போது எளிய முறையில் உச்சமடைய உறுதுணை புரியும். ஆரோக்கியமான உடலுறவுக்கு பூசணி விதைகள் மட்டுமின்றி சூரியகாந்தி விதைகள், சியா விதைகளும் பல நன்மைகளை வழங்குகின்றன. பெண்களுக்கு உச்சமடைவதில் பிரச்னை இருந்தால் அவர்கள் ஆளி விதைகளை சாப்பிடலாம். இது அவர்களுக்குரிய பாலியல் சுரபிகளை இயற்கையாகவே அதிகரிக்கும்.
ஃபிளவாய்டு பழங்கள்
ஆண்களுக்கு விறைப்புதன்மை பிரச்னை இருந்தால், அவர்கள் ஒருநாளைக்கு குறைந்தது ஒரு ஆப்பிள் சாப்பிடலாம். இதில் ஆண்டி ஆக்சிடண்டுகள் அதிகளவில் காணப்படுகிறது. பெண்களுக்கு உச்சமடைவதில் பிரச்னை இருந்தால், ஃபிளவனாய்டு நிறைந்த பழங்களை சாப்பிடலாம். இதன்மூலம் பாலியல் வாழ்க்கை சீரடைந்து, உடல்நிலை ஆரோக்கியம் பெறும்.
மிட்டாய்
ஒருநல்ல காரியம் நடக்கும்போதோ அல்லது ஏதாவது நல்ல விஷயம் ஆரம்பிக்கப்படும்போதோ அனைவருக்கும் மிட்டாய் கொடுப்பது பலருடைய வழக்கம். இதற்கு காரணம் மிட்டாயை சாப்பிட்டால் மனம் மகிழ்ச்சியான நிலை மாறும். மேலும் மிட்டாய்களில் நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை அதிகரிக்கும் தியோப்ரோமின், அனாடாமிட், எண்டோர்பினை வெளியிடும் பினைல்லித்தாமைன் போன்ற வேதியல் பொருட்கள் உள்ளன. இது உடலுறவை ஆரோக்கியமாக மாற்றக்கூடிய பண்புகளை கொண்டுள்ளது. மனைவியுடன் உடலுறவுக்கு செல்லும் முன், ஆண்கள் ஏதாவது ஒரு துண்டு சாக்லேட்டை சாப்பிட்டுவிட்டு செல்லலாம்.
மீன் உணவுகள்
பொதுவாக கடல் உணவுகளிலும் ஒமேகா 3 அமிலம் அதிகளவில் காணப்படுகிறது. இருதய நலனுக்கு வலு சேர்க்கும் இந்த அமிலம் சால்மன் மீன்களில் அதிகளவில் காணப்படுகிறது. அவ்வப்போது உங்கள் உணவுகளில் சால்மன் மீனை சாப்பிட்டு வந்தால், பிறுப்புக்கு வேண்டிய ரத்தம் சீராக பிரியும். மேலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவும் டோபமைன் என்கிற ஹார்மோனின் செயல்பாட்டை அதிகரிக்கவும் சால்மன் மீன்கள் பெரிதும் உதவுகின்ற்ன
முட்டை
ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிப்பத்தில் முட்டையின் மஞ்சள் கரு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதிலுள்ள பி6 மற்றும் பி5 வைட்டமின்களில் உடலுக்கு வேண்டிய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. நீங்கள் அவ்வப்போது கரு முட்டையுடன் உணவு சாப்பிடுவது மன அழுத்தப் பிரச்னைகளையும் விரட்டும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். பொதுவாகவே முட்டைகளில் நல்ல கொழுப்பு, புரதம் ஆகியவை போதுமான அளவில் காணப்படுகின்றன.