ஆங்கிலேயர்களால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட பழமாக இருந்தாலும், ஸ்ட்ராபெர்ரி பழங்கள் இருதய பாதிப்பு கொண்டவர்களுக்கும், ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கும் பல்வேறு வகையில் நன்மைகள் சேர்க்கின்றன.
பெர்ரி வகையைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி பழம் பலருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே. ஆனால் அதனுடைய ஃபிளேவர் தனித்துவமானது. எனினும் இப்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கிட்டத்தட்ட 90% நீர் உள்ளடக்கம் கொண்ட இந்த பழத்தில் ஆண்டிஆக்சிடண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. அதனால் இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றுகின்றன. கொலஸ்ட்ராலைப் போக்க ஸ்ட்ராபெர்ரியை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இதய வடிவிலான ஸ்ட்ராபெர்ரி இதயத்தையும் பாதுகாக்கும் என்பதை தெரிந்துகொள்க.
ஸ்ட்ராபெர்ரியில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்
ஸ்ட்ராபெர்ரி இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது நம் உடலுக்கு மிகவும் அவசியம். எனவே இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஸ்ட்ராபெர்ரியில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் பிற தாதுக்கள் உள்ளன.
சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து
ஸ்ட்ராபெர்ரிகளும் பொதுவாக குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட ஒரு பழமாகும். எனவே, சர்க்கரை நோயாளிகள் இவற்றை நம்பிக்கையுடன் சாப்பிடலாம். அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. அதற்காக ஒரேடியாக சாப்பிட்டுவிடக்கூடாது. சக்கரை நோயாளிகள் எதையும் அளவுடன் சாப்பிட வேண்டும். அதேபோன்று ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் அளவோடு தான் உண்ண வேண்டும்.
ஆண்டிபயாடிக் மருந்துகளை அடிக்கடி சாப்பிடுபவரா நீங்கள்..? அப்போது இதப்படிங்க மொதல்ல..!!
கொழுப்பை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி
நார்ச்சத்து அதிகம் உள்ள ஸ்ட்ராபெர்ரிகளை உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்ட்ராபெர்ரிகளை சாலட், ஜூஸ் மற்றும் ஸ்மூத்தி என உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தவிர, இதை தயிருடன் சேர்த்து பிரட்டி சாப்பிடுவதும் நல்ல சுவையாக இருக்கும்.