வீட்டிலேயே கிடைக்கும் இந்த பொருட்களைக்  கொண்டு முகப்பருவை எளிதில் விரட்டலாம்...

Asianet News Tamil  
Published : Mar 21, 2018, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
வீட்டிலேயே கிடைக்கும் இந்த பொருட்களைக்  கொண்டு முகப்பருவை எளிதில் விரட்டலாம்...

சுருக்கம்

Get rid of acne easily with these items available at home ......

** வேப்பங்கொழுந்தை மையாக அரைத்து ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு கலந்து முகப்பருக்களின் மீது பூசி வந்தால் பரு உடைந்து குணம் கிடைக்கும்.

** பெரிய அளவில் பருக்கள் வந்தால் வெள்ளைப்பூண்டை அரைத்து பருக்களின் மீது பூசி வர, நிவாரணம் கிடைக்கும்.

** சுத்தமான சந்தனத்தையும், கஸ்தூரி மஞ்சளையும் மையாக அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் காலப்போக்கில் குணம் கிடைக்கும்.

** கருந்துளசி இலைகளை பருக்களின் மீது பற்று போட்டு வந்தாலும் குணம் கிடைக்கும்.

** புதினா, செம்பருத்தி இலை, மல்லிகை இலை மூன்றையும் தண்ணீருக்குப்பதிலாக தயிர் விட்டு அரைத்து பூசி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

** ஜாதிக்காய், சந்தனம், மிளகு மூன்றையும் அரைத்து பருக்களின் மீது பூசி வந்தால் குணம் கிடைக்கும்.

** கறிவேப்பிலைக்கொழுந்தை மையாக அரைத்து தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, பருக்கள் குறையும். வேப்பிலைச்சாறு தினமும் குடித்து வந்தால் பருக்கள் வராமல் காத்துக்கொள்ளலாம்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake