சிகரெட் பழக்கத்தை விடவும் உடலுக்கு கேடு விளைவிக்கும் மிகவும் மோசமான பழக்கம் இது... 

First Published Mar 21, 2018, 1:19 PM IST
Highlights
It is a bad habit that can harm the body more than cigarette habits ...


பொதுவாக நாம் வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு என்ன செய்வோம், குட்டித் தூக்கம் போடுவோம் அல்லது ஒரு கப் டீ குடிப்போம். ஆனால், நம்மில் பலர் உணவு உட்கொண்ட பின் குளிப்பார்கள். இது தான் இருப்பதிலேயே மிகவும் மோசமான பழக்கம். இது சிகரெட்டை விடவும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பழக்கம். 

நீங்கள் உங்கள் தாத்தா பாட்டியுடன் இருந்தால், சாப்பிட்ட உடனேயே உங்களை குளிக்க விடமாட்டார்கள். சாப்பிட்டதும் குளிக்கக்கூடாது என்று பலமுறை சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதற்கு எந்த ஒரு ஆன்மீக காரணமும் இல்லை. ஆனால் அறிவியல் காரணம் மட்டும் உள்ளது. அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும். இப்படி வெளியேற்றும் போது, உடலினுள் உள்ள செல்கள் மிகவும் ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருக்கும். இதனால் தான் குளித்து முடித்ததும் பசி.

உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது. இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கும். எனவே உண்டபின் குளிக்கக் கூடாது.

ஒரு குளித்து முடித்த பின் உணவு உட்கொள்ளும் போது, உடலானது உணவில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி, உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று கொள்ளும்.

உணவு உட்கொண்ட உடனேயே குளித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

மத நூல்களின் படி, குளித்து முடித்த பின் ஒரே உடையை சாப்பிடும் போதோ, படிக்கும் போதோ அல்லது கடவுளைத் தொழும் போதோ அணியக்கூடாதாம். எனவே, தினமும் உடையைத் தவறாமல் மாற்றுங்கள். இதனால் வேறு ஏதேனும் நன்மை கிடைக்கிறதோ இல்லையோ, நம் உடல் சுகாதாரமாக இருக்கும்.
 

click me!