பூண்டு எனும் பொக்கிஷம்.. பாலில் பூண்டை வேக வைத்து அருந்தினால் கிடைக்கும் நன்மை தெரியுமா?

By Pani Monisha  |  First Published Jan 26, 2023, 5:46 PM IST

தினமும் பூண்டு உண்பதால் ஏற்படும் சாதக, பாதகங்களை இங்கு காணலாம். 


ஆரோக்கியமான உடல் நலத்துக்கு உணவு பொருள்களை தேர்வு செய்வதில் கவனம் வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யும் போது பொருட்கள் சுவைக்காக மட்டுமல்லாமல் உடலுக்கு நன்மை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில் உணவின் வாசனைக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பொருளான பூண்டின் பயன்கள் குறித்து இங்கு காணலாம். 

பூண்டில் பொதிந்துள்ள சத்துக்கள் 

Latest Videos

undefined

வைட்டமின் பி 6, வைட்டமின் சி, துத்தநாகம், நார்ச்சத்துக்கள், கால்சியம், மெக்னீசியம், செலினியம், மாங்கனீசு ஆகிய சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. அது மட்டுமின்றி அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ஆகியவையும் பூண்டில் காணப்படுகிறது. 

பயன்கள் 

  1. பூண்டில் உள்ள சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். ஆற்றலை அதிகரித்து கூடுதல் கலோரிகளை எரிக்கிறது. இதனால் எடை இழப்பு ஏற்படும். 
  2. உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் நாள்தோறும் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக பசும்பாலில் பூண்டை கொதிக்க வைத்து அருந்த வேண்டும். இப்படி செய்தால் இரத்த அழுத்தம் குறையும்.
  3. காலையில் வெறும் வயிற்றில் பூண்டு உண்பது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்க உதவும்.  
  4. பூண்டில் இருக்கும் அலிசின் என்ற பொருள் கணையத்தின் செயல்பாட்டை தூண்டி விடுகிறது. இதனால் உடலுக்கு தேவையான இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். நீரிழிவு நோய் ஏற்படுவது குறைகிறது. 
  5. தொடர்ந்து பூண்டு சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதிலுள்ள துத்தநாகம், வைட்டமின் சி தொற்றுநோய்களை எதிர்த்து கடுமையாக போராடும். 
  6. பூண்டில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பற்களில் ஏற்படும் வலியை குணமாக்கும். பூண்டின் சாறு ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும் அபாயமும் உள்ளது. 
  7. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து பாலியல் உறவை மேம்படுத்தும் ஆற்றல் பூண்டிற்கு உள்ளது. 
  8. சளி, இருமல், காய்ச்சல் ஆகிய பாதிப்புகளிலிருந்து விடுதலை பெற பூண்டை பச்சையாக சாப்பிடலாம். 
  9. செரிமானம், மாதவிடாய் பிரச்சனை, எலும்புகள் உறுதியற்றதன்மை, மனச்சோர்வு ஆகியவற்றை பூண்டு சரி செய்கிறது.
  10. பூண்டை தேன், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவையுடன் கலந்து தலை முடிக்கு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இது முடி உதிர்வு, பொடுகு ஆகிய பிரச்சனைகளை தீர்க்கிறது. 

இதையும் படிங்க: மசாலா பொடி சீக்கிரமே வண்டு புடிச்சு கெட்டு போகுதா..? ரொம்ப நாள் பயன்படுத்த இதை மட்டும் பண்ணுங்க..

எச்சரிக்கை 

கர்ப்பிணிகள் பூண்டை அதிகமாக எடுத்து கொள்ளக்கூடாது. வேறு மருந்து எடுப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை படி பூண்டு உண்பது நல்லது. எரிச்சல், வயிற்றுப்போக்கு, குமட்டல், வாய்புண் ஆகிய பிரச்சனைகளை பூண்டு அளித்தால் உடனடியாக சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள். 

இதையும் படிங்க: கூடுதல் பவருக்காக பெண்கள் வயாகரா சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

 

click me!