சில உடல்நலன் பிரச்னைகளுக்கு காலையில் எழுந்தவுடன் உப்புநீரில் வாய் கொப்பளிக்கும் படி மருத்துவர்கள் பரிந்துரைப்பது கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்படி செய்வதால், நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
தற்போது தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இன்னும் சில மாதங்களுக்கு நம்முடைய மாநிலத்தின் பல்வேறு இடங்களில் குளிர்ந்த வானிலை தான் நிலவும். அப்போது தங்களுடைய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள பலரும் முன்னுரிமை கொடுப்பது கிடையாது. ஏதாவது உடல் தொந்தரவு ஏற்பட்டால், வீட்டு வைத்தியம் செய்துகொள்வார்கள் அல்லது அவர்களாகவே ஏதாவது ஒரு மாத்திரை வாங்கி சாப்பிடுவார்கள். சில நேரங்களில் இவை பயனளிக்கும் என்றாலும், குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நலக்கோளாறுக்கு வீட்டு வைத்தியம் உடனடித் தீர்வை வழங்கும். அந்த வகையில் தொண்டை தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கும் மற்றும் உடலின் மற்ற உறுப்புகள் நல்லமுறையில் செயல்படுவதற்கும் உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நன்மையை தரும். அந்த வகையில், உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் மற்ற நன்மைகள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
மூச்சுக் குழாய்கள் சுத்தமடைகின்றன
உப்பு நீரில் தொடர்ந்து வாய் கொப்பளிப்பது சுவாசக் குழாய் மற்றும் நாசிகளில் சளி உருவாவதைத் தடுக்கிறது மற்றும் மூக்கு குழாயை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. இதனுடன் தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் உப்பு நீர் குறைக்க உதவுகிறது.
பாக்டீரியாவைக் கொல்லும்
பெரும்பாலான நோய்கள் வாயில் வரக்கூடிய பாக்டீரியாவால் ஏற்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் உப்பு நீரில் வாய் கொப்பளிக்கும் போது, அது கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை நிறுத்துகிறது மற்றும் அதனால் வரக்கூடிய பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன. உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் வாயில் எந்தவிதமான தொற்றுகளும் வராமல் தடுக்கிறது.
வாய் துர்நாற்றம் போகும்
இவை மட்டுமின்றி, உப்புநீரில் வாய் கொப்பளிப்பது வாய் துர்நாற்றத்தை போக்குகிறது மற்றும் ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது. இது தவிர உப்பு நீரில் வாய் கழுவினால், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள அழுக்குகள் ஓடிவிடும். மேலும் இதனால் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கும்
ஹோம்சிக் கொண்ட நபரா நீங்கள்..? அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள்..!!
டான்சில்ஸிஸ் பிரச்னைக்கு தீர்வு
இனிப்பு, புளிப்பு போன்றவற்றைச் சாப்பிடுவதால் ஏற்படும் டான்சில் பிரச்னையை அதிகம் பார்த்திருப்போம். அத்தகைய சூழ்நிலையில், டான்சில்ஸ் வீக்கத்தைக் குறைப்பதில் உப்பு நீர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தினமும் உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது டான்சில் வலி மற்றும் அதன் தொற்றை குறைக்கிறது.
வாய் புண்களை ஆற்றும்
உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது சளி அல்லது வறட்டு இருமல் ஆகிய இரண்டையும் போக்கும். இது ஒரு அழற்சி எதிர்ப்பு மருந்தாக செயல்படுகிறது. உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதால் ஏற்படும் வாய்ப் புண்கள் மறைந்துவிடும். இதனால் எந்த வகையான நோய்த் தொற்றும் வாய் வழியாக உடலுக்குள் நுழையாது.