இந்த காரணங்களுக்காகதான் பெண்கள் மார்பகங்களில் முட்டைகோஸை வைக்கணும்... ஃபேமஸ் டிரீட்மெண்ட்...

 
Published : Jun 30, 2018, 02:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
இந்த காரணங்களுக்காகதான் பெண்கள் மார்பகங்களில் முட்டைகோஸை வைக்கணும்... ஃபேமஸ் டிரீட்மெண்ட்...

சுருக்கம்

For these reasons women will place cabbage in their breasts

முட்டைகோஸை பெண்கள் மார்பகங்களில் வைக்கும் முறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் பரவலாக பின்பற்றப்படுகிறது. 

இந்த முறையால் மார்பகம் வீங்குதல், மார்பக பகுதியில் வலி, குழந்தைகளுக்கு பாலூட்டும் போது மார்பகங்கள் அசௌகரியமாக உணர்தல் போன்றவை சரியாகும். 

சரி இதனை எப்படி செய்வது?  பார்க்கலாம் வாங்க...

** இம்முறையை செய்யும் முன்னர் ஒரு மணி நேரம் முட்டைகோஸை ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளுமை அடைந்த பிறகு, அதன் வெளிப்புற இலைகளை உரித்து வீசி விட்டு, இரண்டாம் அடுக்கு லேயர் இலைகளை எடுத்து பயன்படுத்த வேண்டும்.

** இரண்டாம் அடுக்கு இலைகளை பயன்படுத்தும் முன்னர் அதை இதமான நீரில் கழுவி கொள்ளுங்கள். அந்த முட்டைகோஸ் இலைகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்

** ஸ்டெம் பகுதியை நீக்கிவிடுங்கள். இலைகளை சரியாக மார்பக பகுதியில் நிற்கும் படி வைக்க வேண்டும். முலைகாம்பு பகுதியில் மட்டும் படாதபடி பார்த்துக் கொள்ளவும்.

** இப்போது சுத்தமான அந்த முட்டைகோஸ் இலைகளை மார்பகத்தை கவர் செய்தது போல கட்ட வேண்டும். இதை 20 நிமிடங்கள் வைத்திருந்தால் போதுமானது. அதன் பிறகு நீக்கிவிடலாம்.

நன்மைகள்:

** இதை மீண்டும், மீண்டும் தொடர்ச்சியாக செய்து வந்தால், மார்பகம் வீங்குதல், இரத்த நாளவீக்கம், மார்பக பகுதியில் வலி, குழந்தைகளுக்கு பாலூட்டும் போது மார்பகங்கள் அசௌகரியமாக உணர்தல் போன்றவை சரியாகும். 

** உங்கள் மார்பகள் நலத்துடன் அல்லது நன்கு மாறுதல் ஏற்பட்டு இருப்பது போன்று உணரும்பட்சத்தில் இதை நீங்கள் நிறுத்திவிட வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!