முப்பது வயதை கடந்தவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டிய உணவுகள்..!!

By Dinesh TGFirst Published Nov 7, 2022, 6:38 AM IST
Highlights

கால்சியம் எலும்பு ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. அதை தினசரி உணவு முறை மூலம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
 

கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தருவது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். முப்பது வயதுக்குப் பிறகு எலும்பு ஆரோக்கியம் குறையத் தொடங்குகிறது. அதனால் குறிப்பிட்ட கட்டத்தில், நாம் எடுக்கும் கால்சியத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். முப்பது வயதுக்குப் பிறகு எலும்பு ஆரோக்கியம் குறையத் தொடங்குகிறது. இந்த கட்டத்தில், நாம் எடுக்கும் கால்சியத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். கால்சியம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம். அந்தவகையில், உணவின் மூலம் கால்ஷியம் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பால்

கால்ஷியம் மிகவும் அதிகமாக இருப்பது பாலில் தான். அதனால் தினசரி ஒரு டம்ளர் பால் குடிப்பது பெரியளவில் நன்மையை தருகிறது. பால் ஒவ்வாமை இருப்பவர்கள், அதுதொடர்பாக மருத்துவரை அணுகி மாற்று உணவுகளை சாப்பிட்டுக்கொள்ளலாம். வெறும் கால்ஷியம் உணவுகளை மட்டும் சாப்பிட்டுக்கொண்டு, உழைப்பு எதுவுமில்லாமல் இருக்கக்கூடாது. நன்றாக சாப்பிட வேண்டும், அதற்கேற்றவாறு உழைக்க வேண்டும். அப்போதுதான் சாப்பிட்டச் சோறு உடம்பில் ஒட்டும்

ப்ராக்லி

பல வீடுகளில் இன்னும் ப்ராக்லி காயை பயன்படுத்துவது கிடையாது. எனினும், முடிந்தவரை இந்த கட்டுரையை படிப்பவர்களில் உடனடியாக உங்களுடைய உணவுப் பழக்கத்தில் ப்ராக்லி காயை சேர்த்துக்கொள்வது பல்வேறு வகையில் நன்மையை தரும். காலிஃபிளவர் போன்று இருக்கும் இந்த காய், சுத்தம் செய்வதற்கும் சமைப்பதற்கும் மிகவும் எளிமையானது. இதன்மூலம் உடலுக்கு வேண்டிய கால்ஷியம் சத்து கிடைக்கிறது. எப்போது ப்ராக்லி சமைத்தாலும், அதை ஓவர்குக் செய்துவிட வேண்டாம். குழம்பு, வறுவல் போன்று செய்யாமல் ப்ராக்லியை வைத்து சாலட் செய்தால் வேண்டிய நன்மைகள் உடனடியாகக் கிடைக்கும்.

பாதாம்

தினமும் தயிர் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, முடிந்தால் ஒரு குவளை தயிரை குடிப்பதன் மூலம் உடலுக்கு போதிய கால்ஷியம் சத்து கிடைக்கிறது. குறிப்பாக பாலை விடவும் தயிரில் அதிகளவு கால்ஷியம் உள்ளது. அதேபோன்று பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் பிஸ்தா போன்ற பருப்பு உணவுகளிலும் கால்ஷியம் சத்து நிறையவுள்ளது. முடிந்தவரை உங்களுடைய சமையலில் எள்ளு கொண்டு செய்யப்பட்ட நல்லெண்யில் சமைத்திடுங்கள். அதன்மூலம் உடலுக்கு வேண்டிய கால்ஷியம் சத்து கிடைக்கிறது.

சளி, கபம், மூச்சுத்திணறலை ஓட ஓட விரட்டும் சூப்பர் சூப்.!!

பாலாடைக்கட்டி

தினசரி சாப்பிடும் உணவுகளை தவிர்த்து, புதிய உணவுகள் மூலம் கால்ஷியம் சத்தை பெருக்கிக்கொள்ள விரும்புபவர்கள், பாலாடைக் கட்டி கொண்டு சமைக்கப்பட்ட உணவுகளை உணவுமுறையில் சேர்த்துக் கொள்ளலாம். சில வகையிலான சீஸ்களை வெறும் வாயில் கூட சாப்பிடலாம். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பாலாடைக் கட்டிக் கொண்டு உணவுகளை சமைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். 

பீன்ஸ்

ஆரஞ்சுப் பழங்கள் மூலம் எலும்பு ஆரோக்கியம் பெறுகிறது. அதன்மூலம் கிடைக்கும் வைட்டமின் சி, உடலில் கால்ஷியம் சத்து சேருவதை உறுதி செய்கிறது. பீன்ஸ் காய் மூலமாகவும் நம் உடலுக்கு வேண்டிய கால்ஷியம் கிடைக்கிறது. மேலும் இந்த காயை பல வீடுகளில் தினசரி சமைத்து சாப்பிடும் வழக்கமு உள்ளது. ஒருநாள் சாம்பார் செய்யலாம், மற்றொரு நாள் பொறியல் பண்ணலாம், வேறொரு நாளில் உசிலி அல்லது கூட்டு செய்யலாம். இதுதவிர பீன்ஸ் காய் மூலம் கிடைக்கும் அதிகளவில் நமக்கு புரதமும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

click me!