கோவையில் வேகமாக பரவும் 'ஃப்ளூ' காய்ச்சல்; பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழிகள் இதோ!

By Kalai Selvi  |  First Published Nov 22, 2023, 1:58 PM IST

உங்களுக்கு நீண்ட நாள் சளி, இருமல் அல்லது காய்ச்சல் இருந்தால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம்.


தற்போது தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பருவ மழை தொடர்பான நோய்கள் வேகமாக பரவி வருகிறது. அவற்றில் ஒன்று தான் ஃப்ளூ வைரஸ். இந்த ஃப்ளூ காய்ச்சலானது கொரோனா அச்சத்தை நமக்கு கொடுக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இந்த வைரஸ் தொற்றானது வயது வரம்பின்றி எல்லா வயதினரையும் தாக்குகிறது. 

கோவையை தாக்கும் ஃப்ளூ வைரஸ்:

Latest Videos

undefined

கோவையில் ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. காரணம், காலநிலை மாற்றம், பண்டிகை காலத்தை முன்னிட்டு கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு மக்கள் சென்று வந்தது ஆகியவையே ஆகும்..குறிப்பாக இந்த தொற்றானது குழந்தைகள் மற்றும் முதியவர்களை தான் அதிகம் தாக்குகிறது. இந்த ஃப்ளூ வைரஸ் சுவாசக் குழாய் மூலமாகத்தான் உடலுக்குள் செல்கிறது. முக்கியமாக, ஒருவர் இருமும்போதும், தும்மும்போது இந்த வைரஸ் மற்றவருக்கு சுலபமாகப் பரவுகிறது.

இதையும் படிங்க:  கோவையில் நாளுக்கு நாள் வேகமெடுக்கும் ப்ளூ காய்ச்சல்; முக கவசம் அணிய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

அறிகுறிகள்: 

இந்த வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சோர்வு, உடல் வலி, காது வலி, இருமல், சளி, மூக்கில் நீர் வடிதல் ஆகியவை இதற்கு அறிகுறியாகும். மேலும் இந்த அறிகுறி உள்ளவர்கள் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவரின் ஆலோசையைப் பெற்று மருந்துகளை உட்கொள்ள வேண்டும். 

இதையும் படிங்க:  சென்னையில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு.. என்னென்ன அறிகுறிகள்? எப்படி தற்காத்து கொள்வது?

என்ன செய்ய வேண்டும்?

  • நீங்கள் குடிக்கும் குடிநீரை சூடு படுத்தி தான் குடிக்க வேண்டும் அப்போதுதான் அதில் இருக்கும் கிருமிகள் அழியும்.
  • அது போல் உங்களுக்கு தொண்டையில் கரகரப்பு இருந்தால் மிதமான வெந்நீரில் கல் உப்பு போட்டு அவை தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்க வேண்டும். இதனை ஒரு நாளைக்கு 3 முறை செய்யலாம். 
  • அடிக்கடி உங்கள் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
  • நீங்கள் வெளியே செல்லும்போதெல்லாம் முக கவசம் அணிய மறந்து விடாதீர்கள்.
  • நீங்கள் வெளியே சென்று வந்தால் கை கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவிய பின்னரே வீட்டிற்குள் செல்ல வேண்டும்.
  • வைட்டமின் சி, புரத சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். 
  • முக்கியமாக, உடலுக்கு அவசியம் ஓய்வு கொடுக்க வேண்டும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இவை அனைத்தும் அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே. உங்களுக்கு தொடர்ந்து சளி, இருமல் அல்லது காய்ச்சல் இருந்தால் நீங்கள் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அதுபோல் அடிக்கடி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர், மருத்துவர் ஆலோசனைப்படி அதற்கான தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளலாம்.

click me!