டெங்கு கொசு இந்த நபர்களை தான் அதிகம் கடிக்குமாம்! அது யாரு... ஏன்..?

By Kalai Selvi  |  First Published Nov 21, 2023, 8:32 PM IST

கொசுக்கள் அதிகம் வியர்க்கும் நபர்களைத் தான் தேடிப்போய் கடிக்கிறதாம். அது ஏன்? என்று இங்கு படித்துக் தெரிந்துகொள்ளுங்கள்..


தற்போது நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. காரணம் மழைக்காலம் ஆரம்பமாகி விட்டது. இந்த காலத்தில் தான் கொசுக்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படும். மேலும் இந்த டெங்கு கொசுக்கள் எல்லாரையும் கடிக்காது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்.. அதுதான் உண்மை. இன்னும் சொல்லப்போனால், யாருக்கு அதிகமாக உடல் வியர்க்கிறதோ அவர்களை தான் இந்த கொசு கடிக்கிறது. இதுகுறித்து, இத்தொகுப்பில் நாம் விரைவாக தெரிந்துகொள்ளலாம்..

ஏன் இந்த கொசு இவர்களை தாக்குகிறது?

Tap to resize

Latest Videos

undefined

பொதுவாகவே நமக்கு அதிகமாக வியக்கும் போது உடலில் ஒரு விதமான ரசாயனம் சுரக்கும். மேலும், அந்த ரசாயனம் கொசுக்களை ஈர்க்கிறது. எனவேதான், கொசுக்கள் அதிகம் வியர்க்கும் நபர்களை தேடிப்போய் கடிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கு அதிகம் வியர்க்கும். அதுபோல், கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், உடல் எடை கூடும்போது உடலில் வெப்பமும் அதிகமாகிறது. இதனால் அவர்களுக்கு வியர்வை அதிகமாக வரும். அதனால் இந்த கொசுக்கள் இவர்களை அதிகமாக கடிக்கிறது.

இதையும் படிங்க:  தீவிரமாய் பரவும் டெங்கு காய்ச்சல் : தடுக்க சிம்பிள் வழிகள் இதோ..!!

இந்த கொசு அதிகம் கடிக்கும் பகுதி:

பொதுவாகவே, இந்த டெங்கு கொசுக்கள் பகலில் தான் அதிகம் கடிக்கிறது. அதுவும் குறிப்பாக கைமுட்டி கால் முட்டி கணுக்கால் ஆகிய பகுதிகளில் தான் அதிகமாகக் கடிக்கிறது. 

இதையும் படிங்க:  டெங்கு காய்ச்சல் : பப்பாளி இலை மட்டுமல்ல.. இவைகளும் இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்!

டெங்கு காய்ச்சல் அறிகுறி:

காய்ச்சல், எலும்புகளில் வலி, அசௌகரியம், தசை வலி, உடல் அசதி, கண்கள் சிவந்து போதல், வாந்தி, மயக்கம் ஆகியவை பொதுவான அறிகுறியாகும். எனவே டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்க, கொசுக்கடியில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வழிகள்: 

கொசு உங்களை கடிக்காமல் இருக்க, முழு கை கால்களை மூடும் உடையை அணியுங்கள். குறிப்பாக, உங்கள் கைக்குழந்தைக்கு இந்தமாதிரியான உடையை அணிவியுங்கள். அதுபோல், விவரம் தெரிந்த குழந்தைக்கு கொசு கடிக்காமல் கை, கால்களில் க்ரீம் தடவலாம் அல்லது முகத்துக்குப் போடும் பவுடரை தடவலாம் இப்படி செய்தால் கொசு கடியில் இருந்து தப்பிக்கலாம்.

அதுபோல், உங்கள் வீட்டில் டெங்கு கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக ஃப்ரிட்ஜின் பின்புறத்தில் தண்ணீர் சேரும் இடத்தில் கற்பூரம், சில துளிகள் தேங்காய் எண்ணெய் மற்றும் கல் உப்பு ஆகியவற்றை போட்டு வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கொசுக்களால் அங்கு முட்டையிட முடியாது. அதுமட்டுமின்றி, உங்கள் வீட்டில் தொட்டி இருந்தால் அவற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் டெங்கு கொசுக்களின் உற்பத்தியைத் சுலபமாக தடுக்கலாம்.

click me!