கருவளையத்தால் முகம் அசிங்கமாக தெரிகிறதா? இதோ எளிதான வீட்டு வைத்தியங்கள்…

 
Published : Apr 12, 2017, 01:47 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
கருவளையத்தால் முகம் அசிங்கமாக தெரிகிறதா? இதோ எளிதான வீட்டு வைத்தியங்கள்…

சுருக்கம்

Eye mark will spoil you beauty

 

கருவளையம்:

ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை என பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன.

கருவளையத்தை போக்க இந்த வழிகளை முயற்சிக்கலாம்.

** தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.

** வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும்.

** பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வர கருவளையம் மறையும்.

** தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதை தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.

** பால் பவுடரை தண்ணீர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றி பூசலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.

** போதிய அளவு தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 6 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்