உடல் எடையை அதிகரிக்க ஆசையா? அப்போ இதை சாப்பிடுங்க…

 
Published : Apr 12, 2017, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
உடல் எடையை அதிகரிக்க ஆசையா? அப்போ இதை சாப்பிடுங்க…

சுருக்கம்

Eat this to increase your weight

 

உடல் எடையை அதிகரிக்க ஆசைபடுவோர் உலர் திராட்சையை சாப்பிடுங்கள்.

உலர் திராட்சை:

திராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது.

உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன. மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.

இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.

இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள், கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப் பொருள். சிறிது கூட கொலஸ்ட்ரால் இல்லாமல் இது உடனடியாக ஆற்றலை தருவதால், உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

உலர் திராட்சையானது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றைக் கிரகிக்க உதவுகிறது. இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தூண்டப்படுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்சிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில், அதிக அளவில் பொட்டாசியம் தாது உப்பு இருப்பதால், ரத்த குழாய்களில் அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கிறது.

உலர் திராட்சையில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் இரும்பு, தாமிரச் சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த செல்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருப்பதால், ரத்தசோகைக்கான வாய்ப்பு குறைகிறது.

PREV
click me!

Recommended Stories

Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்
Tomato Side Effects : சாப்பாட்டுல அதிகமா தக்காளி சேர்ப்பீங்களா? இந்த பிரச்சனைகள் ஜாக்கிரதை!