சைவ உணவு உண்பவர்கள் பலருக்கும் பனீர் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். ஆனால் இதை அளவாக சாப்பிடுவது மிகவும். அளவுக்கு மீறி பனீர் சாப்பிட்டால் பல்வேறு தீமைகள் ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த பிரபலமான உணவாக உள்ளது பனீர். திருமண விழாக்களுக்கு என்று பிரத்யேகமாக சமைக்கப்படும் பனீர் டிக்கா, பனீர் பக்கோடா போன்றவற்றை சாப்பிடுவதற்கே பலரும் நிகழ்வுகளுக்கு வருவதுண்டு. அதேசமயத்தில் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு, காய்கறிகளில் இருந்து மாற்றாக பனீர் உணவுகள் விளங்குகின்றன.
அதனால் சைவ உணவகங்களில் பனீரில் பல உணவுகள் சமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதுண்டு. வெறும் சுவையுடன் மட்டுமில்லாமல், பனீர் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பனீரில் புரோட்டீன் ஏராளமாக உள்ளது. பல நன்மைகள் இருக்கும் அதேநேரத்தில், பனீர் சாப்பிடுவதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
undefined
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் பனீர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அது பிரச்சனையை அதிகரிக்கும். அதனால் பனீரை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அளவுடன் பனீர் சாப்பிடுவது நல்லது.
மேலும் செரிமானம் சரிவர நடக்காதவர்கள், செரிமானக் கோளாறு கொண்டவர்களும் பனீர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு காரணம், பனீர் வயிற்றில் கரைவதற்கு மூன்று நாட்கள் ஆகும். இதனை அதிகமாக சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கிவி பழத்தின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்..!!
எதையாவது சாப்பிட்ட உடனே வயிற்றில் பிரச்சனையை சந்திப்பவர்கள், அடிக்கடி ஃபுட் பாய்சனால் பாதிக்கப்படுவர்களும் பனீர் சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும். அதில் உடல் தேவைக்கு மீறிய புரதச் சத்துக்கள் உள்ளன. இது உடலை பெருமளவில் பாதிக்கச் செய்துவிடும். புரத அளவு அதிகரித்தால் பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். இதனால் கூடுதல் நோய் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
பனீர் மிகவும் பிடிக்கும் என்றால், சிறிய அளவில் சாப்பிடலாம். ஆனால் பனீரை அதிகமாக உட்கொண்டால் குமட்டல், தலைவலி, பசியின்மை போன்றவற்றை உண்டாக்கும். எனவே பனீர் சாப்பிடுவதை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. தினமும் பனீர் சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி பிரச்சனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோன்று கர்ப்பிணிப் பெண்கள் பனீர் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவது நல்லது. அதனால் வாயு பிரச்சனை ஏற்படும். அதனால் மருத்துவரின் அறிவுரைப் பெற்று பனீர் சாப்பிடுவது நல்லது.