Betel Leaf : சாப்பிட்ட பிறகு வெற்றிலை சாப்பிடுவது ஏன்? இந்த இலையில் மறைந்திருக்கும் நன்மைகள் இதோ..!!

By Kalai Selvi  |  First Published Jul 26, 2023, 7:35 PM IST

சிலர் உணவுக்கு பின் ஏன் வெற்றிலை சாப்பிடுகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?


நம்முடைய தாத்தா, பாட்டி காலத்தில் தான் வெற்றிலை போடுவதை தான் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் இப்போது உள்ள காலத்தில் வெற்றிலையை யாரும் பயன்படுத்துவது இல்லை. வெற்றிலை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

வெற்றிலையில் அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி1, பி2 போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் கல்யாண வீடுகளில் சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஏனெனில், விசேஷ நாட்களில் மக்கள் பல வகையான உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படக் கூடும். எனவேதான் விசேஷ நாட்களில் வெற்றிலை கொடுக்கப்படுகிறது.

Latest Videos

undefined

இதையும் படிங்க: வெற்றிலையை பற்றி நாம் அறியாத பல மருத்துவ பயன்கள்! தலைமுடி முதல் உடல் முழுக்க, 1 வெற்றிலையால் இத்தனை நன்மைகள்!

வெற்றிலையில் மறைந்திருக்கும் நன்மைகள்:

  • உங்களுக்கு நெஞ்சு சளி இருந்தால், கடுகு எண்ணெயில் வெற்றிலையை லேசாக வதக்கி நெஞ்சில் தடவி வைத்தால் நெஞ்சு சளி குணமாகும். 
  • அதுபோல் வெற்றிலையை விளக்கெண்ணெய் சேர்த்து, அரைத்து பற்று போட்டு வந்தால் கீழ்வாதம் குணமாகும்.
  • நீங்கள் உட்புற காயங்கள் அல்லது வலிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வெற்றிலை சாறு குடிப்பதன் மூலம் வலி நிவாரணம் கிடைக்கும்.
  • மேலும் வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஆகியவை நீங்க வெற்றிலையில் குறைவாக பாக்கு சேர்த்து மெல்லவும். அதுபோல் இரத்த சர்க்கரை அளவு குறைய 2 வெற்றிலைகளை மெல்ல வேண்டும்.
  • குறிப்பாக நீங்கள் வெற்றிலையுடன் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உங்கள் வாயில் பாதிப்பு உண்டாகும். மேலும் சிலர் வெற்றிலை உடன் புகையிலை பயன்படுத்துவார்கள். ஆனால் இது ஆபத்து. எனவே, அதை தவிர்ப்பது நல்லது.
  • ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் சக்தியாக விளங்கும் வெற்றிலை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுக் கோளாறுகளை போக்க உதவுகிறது. இலைகளை நசுக்கி இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடித்தால் குடலுக்குப் பலன் கிடைக்கும்.

இதையும் படிங்க: இட்லி மாவு ஒரு வாரம் ஆனாலும் புளிக்காமல் அப்படியே இருக்கணுமா? வெற்றிலையின் மாயாஜாலத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

click me!