
உடல் எடை அதிகரிப்பு தான் பல பிரச்சனைகளுக்கும் காரணம் என டாக்டர்கள் சொல்கிறார்கள். அதனால் உடல் எடையை குறைப்பதற்காக பலரும் பல வழிகளை முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் இவற்றை முறையாக, தொடர்ந்து கடைபிடிப்பவர்கள் மிகவும் குறைவு. ஜாக்கிங், வாக்கிங், ஒர்க் அவுட், டயட் என எந்த கஷ்டமும் படாமல் ஈஸியாக, அதே சமயம் ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க வேண்டும். அதுவும் வேகமாக குறைய வேண்டும் என நினைப்பவர்கள் தான் அதிகம். நீங்களும் இப்படி நினைப்பவர் என்றால் இது உங்களுக்கானது தான்.
உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும் என்றால் ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை தான் சரியானது. ஜப்பானில் குண்டானவர்களை அதிககமாக பார்க்க முடியாது. அது மட்டுமின்றி அதிக வயதுடையவர்களை, 80 வயதிலும் செம ஆக்டிவாக இருக்கக் கூடியவர்களை ஜப்பானில் தான் பார்க்க முடியும். அப்படி இருப்பதற்கு காரணம் அவர்களின் லைஃப் ஸ்டைல் தான். ஆரோக்கியமான உணவு, அளவான சாப்பாடு, சுறுசுறுப்பான லைஃப்ஸ்டைல் இத தான் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணம். அதோடு ஸ்லிம்மான தோற்றத்திற்கு ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் 5 முக்கியமான ரகசிய வழிகளும் உள்ளது.
ஜப்பானியர்களின் 5 ஸ்லிம் சீக்ரெட் :
1. மெதுவான உணவு
சாப்பாட்டை பொறுமையாக சாப்பிடுவது மரியாதை மற்றும் நல்ல பழக்கமாக ஜப்பானில் கருதப்படுகிறது. ஆனால் இப்படி மெதுவாக சாப்பிடுவதால் உணவை நன்கு மென்று சாப்பிடுகிறோம். வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. உணவு செரிமானமும் நன்கு நடக்கிறது. அளவான சாப்பாடு சாப்பிட முடியும். குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த விட்ட உணர்வு வந்து விடும். அதனால் சுறுசுறுப்பாக இயங்க முடியும். அதிகம் சாப்பிடுவதும் தடுக்கப்படும்.
2. வழக்கமான உடற்பயிற்சி :
தினமும் உடற்பயிற்சி, ஒர்க் அவுட் செய்வது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள மட்டுமின்றி, மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தும். அதிக தூரம் ஆனாலும் நடந்து செல்லும் பழக்கத்தை ஜப்பானியர்கள் கடைபிடிக்கிறார்கள். இதனால் தினமும் நிறைய கலோரிகள் எரிக்கப்படுகிறது. அதோடு சைக்கிளிங், வாக்கிங், விளையாட்டுக்கள் என தங்களை சுறுசுறுப்பாகவே அவர்கள் வைத்துக் கொள்ள உடல் செயல்பாடுகளை அதிகமாக்குகிறார்கள்.
3. அளவானா சாப்பாடு :
80 சதவீதம் அளவு வயிறு நிரம்பும் அளவிற்கு மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பது ஜப்பானியர்கள் கண்டிப்பாக கடைபிடிக்கும் ஒரு பழக்கம். உணவில் கட்டுப்பாடு வைத்திருப்பதால் தான் ஜப்பானியர்கள் ஆரோக்கியமாக, நீண்ட காலம் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இதய நோய்கள், கேன்சர், வாதம் ஆகியவை ஏற்படுவதும் குறைவாக உள்ளது.
4. அதிக க்ரீன் டீ குடிப்பது:
ஜப்பானியர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானது க்ரீன் டீ. அங்குள்ள மக்கள் அதிகம் க்ரீன் டீ குடிக்கிறார்கள். இது உடல் எடையை குறைத்து, வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. இதில் ஆன்டிஆக்சிடென்ட் அதிகம் என்பதால் கொழுப்புக்களை வேகமாக கரைதஅது விடுகிறது. சாப்பிடும் கலோரிகளின் அளவையும் குறைத்து விடுகிறது.
5. காலத்திற்கேற்ற உணவு
ஒவ்வொரு கால நிலை மாறும் போதும் ஜப்பானியர்கள் அதற்கு ஏற்றாற் போல் தங்களின் உணவு முறைகளை மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களின் உணவில் பழங்கள், காய்கறிகள் அதிகம் இருக்கும். இத அவர்களை அதிக சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள உதவுகிறது. இந்த ஆரோக்கிய உணவுகள் கொழுப்புகள், கலோரிகளை குறைத்து, ஃபிட்டாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகின்றன.