பாக்யராஜ் படத்தில் மட்டும்தான் முருங்கைக்காய்... முருங்கைகீரையும் முக்கியமா?

 
Published : Jun 20, 2017, 04:35 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
பாக்யராஜ் படத்தில் மட்டும்தான் முருங்கைக்காய்... முருங்கைகீரையும் முக்கியமா?

சுருக்கம்

drumstick is how important in health

கீரையில் பொதுவாக சத்துக்கள் அதிகம். குறிப்பாக முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. முருங்கை மரம் முழுவதும், மனிதனுக்கு பயனளிக்கும் மரமாகும். முருங்கை கீரையை வேக வைத்து, அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உடற்சூடு, கண்நோய், இவற்றை, முருங்கைக் கீரை நீக்கும். அதனால், முருங்கையை "மருத்துவ பொக்கிஷம்' என்று சொல்கின்றனர். 

முருங்கை ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நல்லது. முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து, வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி, காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து, சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பு வலிகள் நீங்கும். 


முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில், நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்காய் கை கண்ட மருந்தாகும். 
முருங்கைக்காயை வேக வைத்து, கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக்காய் சாம்பார் சுவையானதாக மட்டுமல்லாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ, இரு முறையோ முருங்கைக்காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடையும். வாய்ப்புண் வராதபடி பாதுகாக்கிறது. முருங்கை சூப், காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. 


முருங்கை விதையை கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். எலும்புகளை வலுப்படும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் உள்ளது. 
கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்புச்சளி, சுவாசக்கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கைப்பூ சூப் சாப்பிடுவது மூலம் ஆண், பெண் மலட்டுத் தன்மை நீங்கும். இதைத்தான் நம்ப பாக்கிய ராஜும் சொல்றார்.  முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவினால், முகப்பருக்கள் மறையும்.

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்