அசைவ உணவு பிரியரா நீங்கள்? சைவ உணவு பிடிக்காதா இதைப் படிங்க!

 
Published : Jun 20, 2017, 04:10 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
அசைவ உணவு பிரியரா நீங்கள்? சைவ உணவு பிடிக்காதா இதைப் படிங்க!

சுருக்கம்

Are you vegetarian or Non- vegetarian..?

இன்று ஆரோக்கியமான உணவை தேர்வு செய்து, அதை உரிய நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்துக்கு தூங்க செல்வது என்பது, ஒரு போராட்டமாகவே உள்ளது. ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்பதே நல்லது. காய்கறிகளில் மனித உடலுக்குத் தேவையான, அனைத்து சத்துக்களும் உள்ளன. எல்லா காய்கறிகளையும், போதுமான அளவு தினமும் எடுத்துக் கொண்டால் தான் உடலுக்கு எல்லா சத்தும் கிடைக்கும். எல்லா காய்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் அதிக, ஆன்டிஆன்ஸிடன்ட்கள் இருக்கின்றன. இவை, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய, தீங்கு விளைவிக்கும் நோய் தொற்றுகளை அழிக்கக்கூடியது. ஆரோக்கியமான இதயம் பெற, "மருத்துவர்கள் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்' என்கின்றனர்.

பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கு, பச்சை காய்கறிகள் தான் மிகச் சிறந்த உணவாகும். காய்கறிகளில் உள்ள அனைத்து சத்துக்களும் இதயத்திற்கு பலத்தைக் கூட்டுகிறது. உடல் எடையை குறைக்க பலர் உணவு முறைகளை மாற்றுவர். ஆனால், அவற்றால் உடல் எடை அதிகரிப்பதுதான், பெரும்பாலும் நடக்கும். ஆனால், அதுவே காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் போது அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், நம் வயிற்றை விரைவில் நிரப்பி விடும். அதனால் நம்மால் அதிகமாக சாப்பிட முடியாது. உடல் எடையும் விரைவில் குறைந்துவிடும்.

 

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, உணவில் உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளில் உப்புச்சத்து மிகவும் குறைவு என்பதால்தான், நம் உடலின் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து கொள்ள முடிகிறது. எனவே, தினமும் சில காய்கறிகளை, உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். 


மலச்சிக்கலால் அவதிப்படுவோர், காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், காய்கறிகளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை தங்க விடாமல் வெளியேற்றி விடும். காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம், உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான்களை பாதிக்கக் கூடிய, எந்த ஒரு வேதிப்பொருளும் காய்கறிகளில் இல்லை. இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளை, அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. 

பொலிவான சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள், காய்கறிகளில் அதிகமாக உள்ளன. சருமத்தின் ஈரப்பதத்தை இது தக்க வைக்கிறது. தலை முடி உதிர்வதில் இருந்து, அனைத்து விதமான தலைப்பிரச்னைக்கும் வைட்டமின் மற்றும் புரதச்சத்துக் குறைபாடு தான் முக்கியக் காரணம். இதனால் தான், மருத்துவர்கள் அதிக அளவில் காற்கறிகளை சேர்த்துக் கொள்ள கூறுகிறார்கள். சில நாள்பட்ட வியாதிகளுக்கு, நம் வாழ்க்கை முறை தான் காரணம். இந்த பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, தினசரி உணவில் காய்கறிகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். காய்கறிகளில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது குடலின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் சுலபமாக தடுக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!