
இன்று தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களே இந்த பாதிப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. உடல் பருமன் ஆவது. குழந்தையின்மை, உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் குறிப்பிட்டவை.
இப்பிரச்சனைக்கு தீர்வாக கீழ்கண்ட உணவுகள் பயன்படுகின்றன.
ஸ்ட்ராபெர்ரி: உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டு பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது.
காளான்: செலினியம் குறைபாடும், தைராய்டு ஏற்படுவதற்கு முக்கிய காரணம். செலினியம் அதிகம் உள்ள காளானை, உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
பூண்டு: செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது.
பசலைக் கீரை: பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள், ஒமேகா 3 ஆசிட் உள்ளது. எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால் நல்லது.
முட்டை: முட்டை, பால் பொருட்கள், தைராய்டு சுரப்பிக்கு மிகவும் ஆரோக்கியமானது. இத்தகைய உணவுகளால், கால்சியம் மட்டுமின்றி, அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது. தோல் மிருதுவாக இருக்கவும் இது உதவுகிறது.
தானியங்கள்: தானியங்களில் பிரவுன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி, ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும். தானிய வகைகள் உடலை பருமனாகாமலும் தடுக்கிறது.
புராக்கோலி: இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கும்.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான, பேட்டி ஆசிட்கள் உள்ளன. அத்தகைய பேட்டி ஆசிட்கள், தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.