
1.. காணுதல் :
ஒருவாரம் முழுவதும் தினமும் ஒரு பொருளையோ, அல்லது ஒரு நபரையோ, உற்று நோக்கவும். இரயிலிலோ, பேருந்திலோ பயணம் செய்யும் பொழுது அல்லது, அலுவலகத்தில் தேநீர் இடைவேளையில் இதைச் செய்யலாம்.
கையில் ஒரு குறிப்பேட்டினை வைத்திருந்து, பார்த்த பொருளையோ அல்லது நபரையோ உடனே வரைந்து பார்க்கவும். இது குறுகியகால நினைவாற்றலுக்கான பயிற்சியாகும். அந்த வார முடிவில், பார்த்த ஏழு பொருள்களின் அல்லது மனிதர்களின் படங்களை உங்கள் நோட்டுப் புத்தகத்தில் ஏற்கனவே வரைந்த படங்களைப் பார்க்காமல், மீண்டும் வரைந்து பார்க்கவும். இது நீண்டகால நினைவாற்றலுக்கான பயிற்சியாகும்.
2.. கேட்டல் :
அலைபேசியில் யாரிடமிருந்தாவது அழைப்பு வரும் போதெல்லாம், திரையில் தெரியும் பெயரைப் பார்க்காமல், அழைப்பவரின் குரலை மட்டும் வைத்து, அழைப்பது யாரென்று அறிய முயலவும் அல்லதுமிகவும் பிடித்தமான திரைப்பாடலைக் கேட்கும் பொழுது, அப்பாடலின் பிண்ணனியில் இசைக்கப்படும் இசைக்கருவியை அடையாளம் காண முயலுங்கள். இதேபோல், தினமும் ஒரு பாடலுக்கான இசைக்கருவியை கண்டுபிடிக்கும் பயிற்சியை ஒரு வாரத்திற்குச் செய்து வாருங்கள்.
3.. வாசனை முகர்தல்/சுவை உணர்தல் :
உணவகத்திற்கு சென்று, நல்ல வாசனையான புதியதொரு உணவு வகையை ஆர்டர் செய்து, அவ்வுணவின் வாசனையையும், சுவையையும் வைத்து, அதில் கலந்துள்ள மசாலாப் பொருள்களை அடையாளம் காண முயலுங்கள்.
வாசனை அல்லது சுவையின் மூலம், பொருள்களை அடையாளம் கண்டு கொண்ட பிறகு, சர்வரின் மூலமாகவோ, அவ்வுணவைப் பற்றித் தெரிந்த வேறு யார் மூலமாகவோ, அது சரிதானா என்று சரிபாருங்கள்.
4.. தொடு உணர்தல் / சுவை உணர்தல் :
வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, கண்களை மூடிக் கொண்டு, உள்ளே வைக்கப்பட்டுள்ள பொருள்களை, கையால் தொட்டுப் பார்த்தோ அல்லது அவற்றின் வாசனையை வைத்தோ, அப்பொருள்களை அடையாளம் கண்டுபிடியுங்கள்.
5.. நினைவாற்றல்:
அடிக்கடி அழைக்கும் இரண்டு நண்பர்களின் தொலைபேசி எண்களைக் குறித்துக் கொள்ளுங்கள். அவற்றை மனப்பாடம் செய்துகொண்டு, அந்த எண்களை அடுத்த முறை அழைக்கும் பொழுது, அவற்றை தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ள பட்டியல் மூலமாக டயல் செய்யாமல், நினைவிலிருந்து டயல் செய்ய வேண்டும். அந்த வார முடிவில், அனைத்து 14 எண்களையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் பார்க்கவும்